Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

ஒரு ஜனனம் ஒரு மரணம்

Divine Astrologer

தேதியூர் V.மஹாதேவன்

98417 89483

பெருமாள் கோவிலில் காலை 3.30 மணிக்கு சுப்ரபாதம் போட ஆரம்பித்து விட்டனர்.
சாம்பு எழுந்து காபி குடித்து விட்டு வாக்கிங் செல்ல தயாரானார். அப்பொழுது அம்பி ஐயரும் வந்து சேர்ந்தார்.
ராமசாமி திடீர் என்று இருவரையும் சற்று நில்லுங்கோ என்று குரல் கொடுத்தார். என்ன ராமசாமி இவ்வளவு வேகமா காலம்பரவர என்றார் சாம்பு.
அது ஒன்னுமில்லை…….. ஒரு விஷயம் உங்களிடம் சொல்லனும்னு ஆத்துக்கு போனேன். மாமி நீங்க வாக்கிங் கிளம்பிட்டதா சொன்னா. அதான் ஓடி வரேன்.
அத எப்படி சொல்லரதுன்னு ………என்று இழுத்தார். உனக்கு ஒரு பிரச்சனைன்னா நாங்க விட்டு கொடுத்திடுவோமா என்ன சொல்லு பரவாயில்லை என்ற உடன் நம்ம கோபுவோட அப்பா கிட்டு மாமா தவறிட்டார். காலம்பர………….
அப்படியா……………
அங்கே காரியம் பண்ணி வைக்க வாத்யார் யாரும் வரமாட்டேங்கராளாம்.
ஏன் அப்படி……….
அதுவேர ஒன்னுமில்லை………… யார் கர்மா பண்ணரது என்று ஒரே குழப்பம் தான்.
அவருக்கு 2 பையன், 1 பெண், எல்லோருக் கும் கல்யாணம் ஆகி தனித்தனியா இருக்கா. இரண்டு பையன்களுக்கும் அப்பாவை கண்டால் ஆகாது. அவர் எப்பொழுதும் ஜாதகம், ஜோஸ்யம், பூஜை, யாகம்னு பாதி நேரம் வெளியூர் போயிடுவார். 85 வயது ஆயிடுத்து. இன்னிக்கும் ஒருத்தர் கையை எதிர்பார்க்காம வாழ்ந்து வந்தார். பையன்கள் இரண்டு பேர் வீட்டிலேயும் மாறி மாறி இருப்பார். நேத்திக்குதான் ஊரிலிருந்து வந்தார். வந்தவர் நேரமாச்சேன்னு பெரிய பையனாத்துக்கு வந்தார்.இவால்லாம் அவரவெறுத்தாலும் அவர் பெண் மாப்பிள்ளைக்கிட்ட மட்டும் ஆசை ரொம்ப ஜாஸ்த்தி. நல்லது கெட்டதெல்லாம் அவாகிட்ட தான் சொல்லு வார். நல்லாதான் இருந்தார். காலம்பர காபி சாப்பிட்டு பாத்ரூம் போயிட்டு வந்தவர் பெஞ்சியிலே உட்கார லாம்னு நினைக்கும் போது ஏதோ யோஜனைல கீழே உட்கார்ந்த மனுஷன் அப் படியே போயிட்டார். இதைத் தான் ன்அனாயஸ மரணம் – வினாதைன்யேன ஜீவ னம்ன்னு பெரியவா அடிக் கடி சொல்லுவா. பையன் கள் இரண்டு பேரும் கர்மா பண்ண செலவு யார் பண்ணரதுன்னு யோசிக் கராப்போல தோணுது என்றார்.
சரி நேர போயி நான் சொன்னேன்னு சுந்தேரச வாத்யாரை வரச்சொல்லு நான் அவரிடம் பேசரேன்.
ராமசாமி சரி என்று கூறி கிளம்பினார். செல்லும் வழியில் பல சிந்தனைகள் அவர் மனதில் ஓடியது.
அடச்சே…….. என்ன உலகம்டா இது. வரபோது எத எடுத்துட்டு வந்தோம்…
போகும் போது எத எடுத்துண்டு போப்போரோம். இரண்டும் இல்லை.
முன்னல்லாம் இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் ஆனா இப்பவெல்லாம் இன்னிக்கு செத்தா இன்னிக்கே பால் ஆயிடுத்து. அப்படி இருக்கும் போது இதுக்கு நடுப்பர எத்தனை பிரச்சனை போராட்டம். ச்சே என்ன வாழ்க்கைடா இது என்று யோசித்து கொண்டே சுந்தரேச வாத்யாரிடம் விபரத்தை கூறியவுடன் யாரு.. நம்ம கிட்டு மாமாவா என்று ஒரு நிமிடம் அதிர்ந்து போய்…… நல்ல மனுஷன் சரி வாங்கோ என்று புறப்பட்டார்.
அவர் பார்த்து சேர்த்து வைச்ச ஜாதகம் தான். இன்னிக்கு நான் நன்னா சௌபாக் யத்தோட இருக்கேன் ராமசாமி. ஏதோ அவர் கர்மாவோட பலனோ இல்லை மூதாதயர்கள் பண்ணின கர்மாவோ அவர் பெண் வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னவுடன் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அது அவளோட கர்மான்னு ஊரே பெருமைப் படற அளவுக்கு பண்ணி வெச்சார். ஆனா இன்னிக்கும் அந்த மாப்பிள்ளை பையன் மனசு கோணாமல் இவருக்கு வேனுங்கரது செஞ்சுண்டுதான் இருக்கான். என் வாழ்க்கைக்கு பிச்சை போட்ட அவருக்கு கடைசி அந்திம கர்மாவை நான் பண்ணி வெக்கலைன்னா என்னை விட ஒரு பாவி இந்த உலகத்திலேயே இருக்க மாட்டான் வாங்கோ சீக்கிரம் போகலாம் என்று மனம் கலங்கினபடி இருவரும் வந்து சேர்ந்தனர்..
சாம்புவுக்கு போகும் வழியில் ஒரு யோசனை. சரி …..
அவன் மாப்பிள்ளையை பண்ண சொல்ல லாம்னா அவன் வேற ஜாதியா போயிட்டான். அதனால என்ன மாப்பிள்ளைதான் கடைசி வரைக்கும் அவரை
தாங்கிண்டு இருந்தார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனா…..இந்த விஷயம் அப்படி இல்லையே ……..என்ன பண்றது எப்படி சொல்லறது என்று யோசித்தார். சாம்பு மனதை தேற்றிக் கொண்டு விபரத்தை மாப்பிள்ளையிடம் தெரியப்படுத்தி னார்.
மாப்பிள்ளை பையன் உடனே என்ன ஆச்சு அவருக்கு ராத்திரி 11 மணிவரை நான் அவ ரோட பேசிட்டுதானே வந்தேன். நன்னாதானே இருந்தார். ஆனா அவர் ஒரு விஷயம் நான் கிளம்பும் போது சொன்னார். உள்ளே பீரோ வில் ஒரு டைரி இருக்கு நேரம் கிடைக்கும் போது அத பாரு. பல விஷயம் உனக்கு புரியும் என்று சாவியை என்னிடம் கொடுத்தார். சரி சரி நேரத்தை வீணாக்காம கிளம்பி மேலே ஆக வேண்டியத பார்க்கலாம் வாங்கோ என்று மாப்பிள்ளையும் பெண்ணும் கிளம்பினார்.
அதற்குள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
சுந்தரேச வாத்யார் இரண்டு பையன் களையும் அழைத்து யார் கர்மாவை பண்ணப் போரேள் என்று கூறிய உடன் யார் வேணும்னா பண்ணட்டும் அவாளே மொத்த செலவையும் பண்ணட்டும். நாங்க ஏதோ எங்களால முடிஞ்சதை செய்யறோம். என்ற உடன்……………
ஜோஸ்யர் மாமா அடச்சே இவ்வளவு தானா நீங்கல்லாம் எவ்வளவு பெரிய மனுஷன். உங்கள பெத்து வளத்து ஆளாக்கின உங்க அப்பனுக்கு கொள்ளி போட ஆயிரம் யோஜனை பண்ணரேள். இந்த கர்மாதாண்டா உங்களுக்கு முக்கியமானது. பணம் இன்னிக்கு வரும் இப்பவே போர இடம் தெரியாம போயிடும். கர்மா அப்படி இல்லை. கிடைக்காத விஷயம்டா அது. கர்மா பண்ணாதவன் வாழ்க்கை எல்லாம் எப்படிப்பட்டதுன்னு என்னைப் போல அனுபவிச்சவனுக்குத் தான் தெரியும் என்று கோபத்துடன் கூறி விட்டு மாப்பிள்ளை …..நீங்க போய் குளிச்சுட்டு வாங்கோ……… ஏய் சுந்தரேசா நீ போய் வேண்டிய ஏற்பாடு களை பண்ணு. நான் பார்த்துக் கிறேன் எல்லாத்தையும் என்றார். மாப்பிள்ளை அனைத்து கர்மாக்களையும் சிரத்தையுடன் முன் நின்று செயல்பட்டார்.
13ம் நாள் சுபஸ்வீகாரம் செய்யும் போது ஜோஸ்யர் மாமா கர்மாவின் பயனை விளக்கிக் கூறினார்.
இன்னிக்கு ஒரு ஜோஸ்யரிடம் ஜாதகம் பார்க்க போனால் முதல்ல அவர் சொல்லரது உங்க குடும்பத்தில் பித்ரு தோஷம்ம் இருக்கு என்றுதான்.
இன்னிக்கு பல குடும்பத்திலே இது தான் அதிகம். முதல்ல எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டியது. காலமானவர் எந்த திதியில் காலமானார், எந்த பட்சத்தில் (அமாவாசையி லிருந்து பௌர்ணமி வரை சுக்லபட்சம் வளர் பிறை என்றும், பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரை கிருஷ்ணபட்சம் தேய்பிறை என்று பெயர்) என்பதை நினைவில் கொண்டு கர்மாக்களை செயல்பட வேண்டும்.
திதிங்கரது சூரியனுக்கும் – சந்திரனுக்கும் உள்ள இடைவெளி. நாம் வணங்கும் தெய் வங்களின் பிறந்த நாளை திதியாக கணக்கிட்டு வழிபடறோம் இல்லையா. பிள்ளையார் சதுர்த்தி கோகுலஅஷ்டமி அனுமத் ஜெயந்தி (அமாவாசை) ஸ்ரீராம நவமி, ரததசப்தமி, பிரதோஷ திரயோதசி இது போல நம் முன்னோர்களின் இறந்த திதியை கவனத்தில் கொண்டு சிரார்த்த கார்யங்கள் செய்ய வேண்டும். அது நம் குடும்பத்துக்கு பல ஸ்ரேயசைக் கொடுக்கும். இல்லையானால் பிள்ளைகளின் சந்ததிகளைப் பாதிக்கும். சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை சந்திரன் பெற்று பூமிக்கு பிரதிபலிக்கிற அளவுதான் திதிகள் என்பதை காட்டுகின்றன.
ஜீவாத்மாக்கள் யாவும் பரமாத்மாவிடம் இருந்து வந்தது ஜீவாத்மாக்கள் படிப்படியாக ஆத்ம வளர்ச்சி பெற்று இறுதியில் பரமாத் மாவை அடைகிறது.
ஜீவாத்மாவானது பல பிறவிகளை எடுத்து பலவித எண்ணங்களை ஒவ்வொரு பிறவி யிலும் ஈடேற்றி கொள்கிறது. அது இறுதியில் எல்லா ஆசைகளையும் துறந்து முடிவில் கோப, தாப, அஹங்கார, ஆத்திர என்பது போல அனைத்தும் அடங்கி சாந்த சொரூபனாகி தியானங்கள், யோகநிலை மூலமாக பரமாத்மாவை அடைகிறது. மாயைகள் யாவும் மனதில் இருந்து மறையும் போது நம் மனதில் பிரம்மம் வெளிப்படுகிறது.
நாம் உலகில் வாழ்வதற்கு னிண்டான ஒளியை சூரியன் தருகின்றார். அதன் மூலமாக உணவுப் பொருட்கள் உற்பத்தி ஆகிறது. நம் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள் சூரியன் என்கின்ற பிரம்மத் திடம் இருந்து வந்தவை. ஸ்தூல ஜீவராசிகள் வாழ்கிற இடம் தான் பூமி, சூட்சும ஜீவராசிகள் வாழ்கின்ற இடம் சந்திரலோகம். நாம் ஒவ்வொருமுறையும் நம் பிறவிகளின் முடிவில் நம்ம ஆசைகளையும், சுற்றத்தார் மீது கொண்ட ஆசைகளையும், பொருள்களின் மீது வைத்த பற்றுகளையும் துறந்து விடுவது இல்லை.
அதனால் நம்முடைய பிறப்பிடமான சூரியனுடைய லோகத்திற்கு ஆத்மாக்கள் செல்வதில்லை. இறந்த பின்னர் நமக்கு அருகாமையில் உள்ள பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிற சந்திரலோகத்திற்கு சென்று வசிக்கிறோம். அங்கிருந்து திரும்பவும் பூமிக்கு வந்து தான் செய்த கர்மாவோட வினைப் பயன்களை மீண்டும் அனுபவிக்க தொடங்குகிறோம். இதைத்தான் நாம் ஜன்மாந்திர சுகிருதம்ம் என்கிறோம். நமது ஜீவாத்மாவானது பூமிக்கும் சந்திரனுக்கும் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக் கிறது. அதனால இறந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் போன்ற கர்மாக்கள் செய்யறபோது திதிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
அமாவாசை அன்னிக்கு சூரியனது ஒளிக்கதிர்கள் சந்திரனுக்கு கிடைக்காது.
அதனால் சந்திரலோகத்தில் வாழற நம் முன்னோர்கள் உணவு இல்லாம கஷ்டபடறா. அந்த நேரத்திலே தான் நாம நம் முன்னோர் களுக்கு எள்ளுடன் கூடிய தண்ணீரை விட்டு ஸ்ரார்த்த கர்மாக்களால் அவர்களின் தாகத்தை போக்குகின்றோம். அந்த நாட்களில் இறந்தவர்களின் பெயரில் தான தர்மங்களை செய்கிறோம்.
சூரியனான பிரம்மமும், சந்திரனில் உள்ள சூட்சும ஜீவாத்மாக்களும் பூமியில் உள்ள ஸ்தூல வடிவில் நம் போன்ற ஜீவாத்மாக்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையவை. இவைகளின் சம்பந்தம் திதிகளினால் நிச்சயிக்கப்படுகிறது.
சூரிய கிரஹனத்தன்னிக்கு சூரியனுடைய கதிர்கள் பூமிக்கு வராததால் (தடைப்படுவதால்) பூமியில் னிள்ள பிராணவாயு மாசுபடுகிறது. அதே போல சந்திரகிரஹணத்தன்றும் நடை பெறுகிறது. ஆதலால் கிரஹணம் ஆரம்பிக்கும் போதும், முடிந்த பின்னரும் நாம் தலை முழுகி நீராடி தர்பண திதிகள் செய்து புத்துணர்ச்சி அடைகிறோம்.
திதிகளில் செய்யப்படும், கர்மாக்கள் பிறவி பயனில் இருந்து விடுபட பெரிதும் உதவி புரிகின்றன. பித்ருக்களுக்கான அமாவாசை, நாக சதுர்த்தி, கந்த சஷ்டி, ரதசப்தமி, விஜயதசமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, பிரதோஷ த்ரயோதசி வழிபாடு, பௌர்ணமி போன்ற திதிகளும் நம்முடைய பூஜை, தான தர்மங்கள், அர்ச்சனை, அபிஷேக ஆராதனை, ஹோமங்கள் மூலமாக பிறவிப் பயனின்று விடுபட உதவுகிறது. நாம் திதிகளையும், கர்மாக்களையும் பித்ரு காரியங்களையும் சிரத்தையுடன் செய்தால் நமக்கு மீண்டும் பிறவி இன்றி வாழ முடியும். இப்படி பல பூஜைகளையும் கர்மாக்களையும் விடாமல் கடைசி காலம் வரை செய்த மிக உத்தமமான மனிதர் தான் நம்முடைய கிருஷ்ணசாமி¢ (கிட்டு மாமா) அவர் ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போம் என்று ஜோஸ்யர் மாமா கூறியவுடன் எல்லோ ருடைய கண்களும் சற்று கலங்க வைத்தது.
அனைத்து விஷயத்தையும் சொல்லி முடித்து விட்டு மாப்பிள்ளையும் பெண்ணை யும் கூப்பிட்டு உங்க அப்பா காலமாரத்து முன்னால மாப்பிள்ளையிடம் ஏதோ கூறினதா சாம்பு சொன்னார். உடனே மாப்பிள்ளை அனைவரது முன்னிலையில் அவர் கூறிய விஷயத்தை சொல்லி விட்டு பீரோவை திறந்து அந்த டைரியை எடுத்து அனைவரது முன்னிலையிலும் படிக்க ஆரம்பித்தார். அவர் இறப்பதற்கு முதல் நாள் 12 மணி அளவிற்கு அவர் கைப்பட எழுதிய உயில் படிக்கிறேன் கேளுங்கள் என்றார்.
நாளை காலை 4.30 மணி அளவில் என் னியிர் இந்த பூத சாரத்திலிருந்து பிரிந்து விடும். என்னுடைய அந்திம கர்மா அனைத்தும் என் மாப்பிள்ளையும் பெண்ணும் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஆகும் செலவு பக்கத்தில் உள்ள பேக்கில் வைத்து இருப்பதாகவும் மேலும் என்னுடைய பேங்கில் உள்ள தொகை மற்றும் டெபாசிட் அதற்கான விபரமும் என்னுடைய சொந்த உழைப்பால் கட்டிய என்னுடைய வீடு மற்றும் அனைத்துப் பொருட்களும் என் மாப்பிள்ளை, பெண் ணுக்கே சேர வேண்டியதாகவும் என்னுடைய சாரம் இந்த இடத்திலிருந்து கிளம்பிய 30 நாட்களுக்குள் இங்கு உள்ளவர்கள் வீட்டை காலி செய்து மாப்பிள்ளையிடம் ஒப்படைக்க வேண்டியதாகவும் மேற்கண்ட வீடு, பாங்கில் உள்ள தொகையாவும் மாப்பிள்ளை பெண்ணின் சுய முடிவுக்கு உட்பட்டதாகவும் இதில் வேறு யாருக்கும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை. இது என்னுடைய சுய நினைவுடன் எழுதப்பட்ட உயிலாக கருதி செயல் பட வேண்டியது. இப்படிக்கு கிருஷ்ண சாமி தேதி நேரம் இடம் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று கூறியவுடன் ஜோஸ்யர் மாமா ஒரு நிமிடம் யோசித்து தன் ஆயுள் பாவத்தை எப்படி துல்யமா கணக்கு போட்டு எழுதி இருக்கார். பெரிய ஜோஸ்யர் தான்யா அவர். அவர் பண்ணின பூஜாபலன், தான் செய்த கர்மாவின் பலன் எப்படி அவருக்கு இது போல தோன்றி இருக்கு பாரு, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, இரண்டு பையன்களையும் கூப்பிட்டு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொல்லி அதற்கான உரிய நடவடிக்கைகளை செய்தார்.
அப்பொழுது தான் இருவரும் முழித்துக் கொண்டு தான் செய்த தவறை உணர்ந்தனர். இன்று இருவரும் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் கஷ்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மாப்பிள்ளையும் பெண்ணும் அந்த வீட்டை விரிவுபடுத்தி அவர் பெயரில் அந்திம காரியங்கள் செய்ய வேண்டிய வசதியும், அவருடைய பணத்தை ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி அதன் மூலம் பலரும் பயன் அடைய ஏற்பாடுகள் செய்து நடத்தி வருகின்றனர்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் யாவும் என்னுடைய சொந்த அனுபவபாடமாகும்.

Divine Astrologer

தேதியூர் V.மஹாதேவன்

98417 89483