Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

கருணை மழை பொழியும் அன்னை யமுனாம்பாள்

yanumbal1பத்தினி தெய்வமாக மாறிய மகாராணி

இந்து சமய வழிபாடு தொன்மையும் நன்மையும் மிக்கது. ஆதிகாலத்தில் மனிதன் இயற்கையா வழிபட்டு வாழ்ந்துள்ளார்கள். இன்றும் சில இடங்களில் இயற்கையை இறைவனாக வழிபடுவது நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்ப மரங்களை வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக பஞ்சபூத தத்துவத்திற்கு ஏற்ப மரங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் முறையே மாமரம், அருகம்புல், வாழை, வேம்பு, வெற்றிலை. அதில் நீர் தத்துவத்தில் உள்ள மாமரத்தில் அமர்ந்து அருளாசி வழங்கும் அன்னை யமுனாம்பாள் ஆலயத்தின் வரலாறு.

சுமார் 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னர் சரபோஜி தன் மனைவி யமுனாம்பாயுடன் திருவிசநல்லூரில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ஸ்ரீதரவெங்கடேச ஐய்யாவால் சுவாமியிடம் ராமநாம ஜப தீட்சை பெற்று சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜபித்து வந்தனர்.

ராம நாமத்தை ஜபித்து வந்த மகாராணி யமுனாபாய் என்கிற யமுனாம்பாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மா மரத்தில் மெய்பொருளாம் இறைவனை தனக்கு உறுதுணையாக எண்ணி அம்மெய்ப்பொருளோடு மாமரத்தில் இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர்களின் வழியில் வந்த மராட்டிய மன்னர்கள் அந்த மாமரத்தையே இறைவனாக நினைத்து வழிபட்டு தங்கள் வம்சத்தின் புத்திரதோஷம் நீங்கப் பெற்றனர். மாட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாபசிம்ம மகாராஜா காலத்தில் அன்னை யமுனாம்பாள் பெயரில் சத்திரம் ஒன்று நிறுவி அனைவருக்கும் அனைத்துவித தர்மங்களும் செய்து வந்தனர்.

yanumbal2மேலும் இவ்வூருக்கு அன்னை யமுனாம்பாள் பெயரை வைத்து யமுனாம்பாள்புரம் என்று அழைத்தனர். புத்திர பாக்கியம் அருளும் சந்தான ராமர் ஆலயத்தை நிறுவியும் சதுர்வேத பிராமணர்களுக்கு குடியிருப்பு வசதியும் செய்து கொடுத்து சர்வ மான்ய அக்ரஹாரம் என்றும் பெயரிட்டு அவர்களுக்கு அருகில் உள்ள கிராமத்தில் விளைநிலங்களை கொடுத்தும் அவ்வூருக்கு சர்வமான்யம் என்றும் பெயரிடப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதர் சந்தான ராமரை பற்றி பாடும்போது, யமுனாம்பாபுரி நீ வசந்தம் என்று பாடியுள்ளார்.

காலப்போக்கில் இவ்வூர் நீடாமங்கலமாக மறுவியது. அதன் பிறகு நகரவாசிகள் மாமரத்திற்கு முன்பாக ஒரு ஆலயம் அமைத்து ஒரு கையில் படியுடன் கூடிய அம்பாள் விக்ரகத்தை நிறுவி வழிபட்டு வந்தனர்.  1972ம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் (புயல் காற்றில்) அந்த மாமரம் முறிந்தது. அதனை ஊர்மக்கள் முயற்சியில் அன்னை யமுனாம்பாள் இறைநிலையோடு மீதம் இருந்த மாமரத்தை செப்பு கவசம் இட்டு, இன்றும் வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி வெள்ளியன்று ஏகதின உற்சவமாக மிக பிரம்மாண்டமாக திருவிழா நடைபெற்று வருகிறது. வேண்டும் வரத்தை வேண்டியபடி அருளும் கருணை உள்ளம் மிக்க அன்னை யமுனாம்பாளை திருமண பாக்கியம், தீர்க்கசுமங்கலி பாக்கியம், புத்திர பாக்கியம், சுகப்பிரசவம், கல்வி மேம்படவும், அரசு மற்றும் அரசியல் ரீதியான பதவி உயர்வுகள் உள்பட 16 விதமான பாக்கியங்களையும் வேண்டி இந்த அம்பாளை வழிபட்டு பயன் அடைந்தவர்கள் ஏராளம்.

yanumbal3பட்டத்து அரசியாக இருந்து தனது பக்தி பெருக்கத்தால் இறைவனுடன் ஐக்கியமான தெய்வ மங்கை ஞான சித்தருமான அன்னை யமுனாம்பாள் ஆலயம் தற்சமயம் நகரவாசிகள் மற்றும் சந்தான ராமஸ்வாமி கைங்கர்ய சபா மூலமாக சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இவ்வாலய குடமுழுக்கு தை மாதம் 24 தேதி என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வரிய திருப்பணியில் தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து அன்னை யமுனாம்பாளின் திருவருளை பெற வேண்டுகிறோம்.

இங்கனம் :
நகரவாசிகள் மற்றும் ஸ்ரீசந்தானராமசுவாமி கைங்கர்ய சபா, நீடாமங்கலம்,
தொடர்புக்கு : 9442951265, 9488109428

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
98417 89483