Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

களத்திர தோஷம்

flowers-290x290

சாம்புவிற்கு காலம்பர எழுந்ததிலிருந்து மூடு சரியில்லை. ஆனால் அதை வெளிக் காண்பித்துக் கொள்ளாமல் காபி குடித்து விட்டு வாக்கிங் கிளம்பி விட்டார்.

எதிரில் அம்பி அய்யரும், பிச்சுமணியும் “என்ன சாம்பு . . . . ரொம்ப டல்லா இருக்காப் போல தெரியுது” என்றார்.

“அது ஒன்னுமில்லை. அமாவாசை தர்ப்பணம் செய்யனும். இன்னிக்குன்னு பார்த்து சபேச சாஸ்திரி ஊரிலே இல்லை. அதான் . . . ஒரே யோசனையா இருக்கு” என்றார்.

என்ன பிச்சுமணி எப்படி இருக்கே. ஊர்லே எல்லோரும் சௌக்கியம் தானே என்று கேட்டார் சாம்பு.
ம் . . . . .
“என்ன ஒரு யோஜனையா. இழுத்தாப் போல சொல்லற” என்றார்.
“அது ஒன்னுமில்ல. நம்ம ஜானகி மாமியோட பெண் இருக்காளே அவ திரும்பி ஆத்துக்கு வந்துட்டாள். அவ ஜாதகத்த நம்ம ஜோஸ்யர் மாமா கிட்ட காண்பிச்சா தேவலை” என்றார்.

“அட…. இவ்வளவுதானே. என்னடான்னு பார்த்தேன். சரி விடு. மாமா பூஜை முடிச்ச அப்புறம் போய் பார்க்கலாம். ஆனா இன்னிக்கு அவரும் தர்ப்பணம் பண்ணி பூஜை முடிக்க நேரமாகும். மதியானமா போகலாம்” என்றார்.

வாசலில் பெல் சத்தம் கேட்டதும், ‘யாரது’ என்று குரல் கொடுத்தார் ஜோஸ்யர் மாமா.

‘நாந்தான் சாம்பு’ என்றார்.

‘வா சாம்பு எப்படி இருக்க’ என்று விசாரித்து, யாரு பிச்சுமணியா என்ன.. எப்படி இருக்க என்று கேட்டார். விவரத்தை சொன்னதும், “சரி ஜாதகத்த கொடு பார்ப்போம்” என்றார்.

ஆமா நம்ம ஜானகி பெண் ஜாதகம்னா இது. நான் அப்பவே சொன்னேன். கேட்கலை. ஆத்துல பித்ரு தோஷம் இருக்கு. அதுக்கு பரிஹாரம் செய்துட்டு பண்ணு என்று. ஆனா இன்னிவரையிலும் பண்ணவே இல்லை. அது அப்படித்தான் பண்ணும் என்று சொல்லி விட்டு விவரிக்க ஆரம்பித்தார்.

இருவர் இணையின் விவாஹம். கன்னியை தானமாக பெறுவதால் கன்யாதானம், கையைப் பிடிப்பதால் பாணிக்கிரணம் என்று சாஸ்திர சம்பிரதாயம் கூறுகிறது. இருமனம் கலந்தால் திருமணம் என்று பெரியோர்கள் நல்லாசி வழங்குகிறார்கள்.

தவ ஸ்ரேஷ்டர்களில் தலை சிறந்தவர், ராஜகுரு, பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு ஆவர். அசுரர்களில் சுக்கிரன் ஆவர். சுக்கிரன், சூரியனை மையமாக அமைத்து சுற்றி வரும் எட்டு கிரகங்களில் முதன்மை பெறுவது புதன், இரண்டாவது வலம் வருவது சுக்கிரன் தான் சுக்கிரன் களத்திர காரகன், (கணவன், (அ) மனைவி) இல்லறம் போன்ற இன்ப உணர்ச்சிக்கு, காமத்திற்கு களவியலுக்கு, காதலுக்கு, காரகம் வகிக்கிறார். ஆகவே ஒருவருக்கு நல்ல மனைவி அல்லது கணவன் அமைய ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் சுத்தமாக அமையப் பெற்று இருப்பின் நல்ல தாம்பத்திய வாழ்க்கை ஏற்படும்.

களத்திர காரகனான சுக்கிரன் நல்ல நிலை யில் சுப ஸ்தானாதிபத்தியம் பெற்றிடவும், 7 மிடத்து அதிபதிக்கும், சுக்கிரனுக்கும், பாபர்களின் திருஷ்டி, சேர்க்கை இல்லாமல் சுபர் பார்வை பெற்றிருந்திடின் இல்லறம் என்ற நல்லறம் அமைத்து நீடூழி வாழ்வார்.

ஜாதகத்தில் பனிரெண்டு பாவங்களுமே முக்கியமானவைகள் தான். எந்த பாவத்தை யும் குறைத்தோ, உயர்த்தியோ சொல்ல முடியாது. எந்த விதமான பேதமும் பார்க்க முடியாது. இதில் இலக்ன பாவமே முதலிடம் வகிக்கிறது. இது உதய இலக்கினம் எனப்படும். இந்த பாவத்திற்கு எதிரில் உள்ள பாவமே களத்திர பாவம் அல்லது களத்திர ஸ்தானம் எனப்படும்.

களத்திர பாவம் என்றால் கணவன் அல்லது மனைவியைப் பற்றி கூறும் இடமாகும். குறிப்பிட்ட வயதில் தாயார், தந்தையார் ஆதரவோடு வளர்ந்து வரும் நாம் தோராயமாக 21 வயது அதற்கு மேற்பட்டு திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டு வரும் மனைவியோ அல்லது கணவருடனோ இணைந்து கடைசி காலம் வரை வாழ்ந்து விடுகிறோம். ஆனால் எல்லோரும் சிறப்பாக இருக்கின்றனரா என்றால்? இல்லை என்பது தான் பதில். திருமண பந்தம் என்பதே இணைந்து வாழ்வது தானே? அதை விட்டு ஏன் பிரிவு, பிரச்சனை வந்தது என மனதில் கேட்டுக் கொண்டால் இது தான் களத்திர தோஷமா என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக ஐதீகம். ஆனால் உண்மையில் கலியுகத்தில் ஜோதிடர்களால் நிச்சயிக்கப்படு கின்றன என்பதே உண்மையிலும் உண்மை. ஆனாலும் அனைத்து ஜோதிடர்களும் என் போன்று அனுபவத்தையும் சேர்த்து பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. சரியான ஜோதிடரை தேர்ந்து எடுப்பதும் மக்களின் தலையாய கடமையாகும்.

ஒரு சில ஜாதகத்தில் தோஷத்தையோ, குறை களையோ ஒரளவு சரி செய்யலாம் என்றா லும் கூட சில ஜோதிடர்களால் குறைகளும் தோஷங்களும் அதிகமாகி விடுகிறது. ஆண், பெண் இருவரின் ஜாதகத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா, அது எந்த அளவு உள்ளது என்பதை பார்ப்பது கிடையாது.

நட்சத்திர பொருத்தத்தை பார்த்து 10க்கு 9 உள்ளதா! ஆஹா பேஷ் நன்னா செய்திட லாம் என சர்டிபிகேட் தந்துவிடுபவர்கள் தான் அதிகம்.
திருமணத்துக்கு பிறகு சிறிது காலம்கூட ஆகாத நிலையில், கோர்ட், வம்பு, சண்டை என்று விவாக ரத்து வரை சென்று விடுகிறது. ஏன் இந்த நிலை? களத்திர தோஷ ஆய்வு சரியில்லை என்று தானே அர்த்தம். ஜாதகத்தை உற்று நோக்காததால் வந்த பரிதாப நிலை.
ஒவ்வொரு பாவத்தையும் ஆராயும்போதே வேறு பாவங்களும் அதனுடன் சம்பந்தப்படும், அவற்றையும் ஆராய்ந்தே சேர்க்க வேண்டும். இதே போல் நட்சத்திர பொருத்தத்தை வைத்து சேர்த்து இன்று பரிதாப நிலையில் நிற்கும் இந்த பெண்ணின் ஜாதகத்தை பாருங்கள். களத்திர தோஷம் எவ்வாறு பின்னி உள்ளது என்பதை சொல்றேன் கேட்டுக்கோ பிச்சுமணி.

பிறந்த தேதி.29.3.1971. பரணி நட்சத்திரம். கன்னி லக்னம், விருச்சித்தில் குரு (வக்கிரம்) தனுசு-செவ்வாய், மகரத்தில் ராகு, கும்பத் தில் சுக்கிரன், மீனத்தில் சூரியன், மேஷத்தில் புதன், சனி, சந்திரன் கடகத்தில் கேது.

நளினமும், சாதுர்யமும் கொண்ட கன்னி இலக்னம், நல்ல அழகான பெண் தான். ஆனால் களத்திரம் நன்கு அமையவில்லை. ஜாதகத்தில் 2,7,8ல் சூரியனோ, செவ்வாயோ அல்லது இருவரும் கூடியோ நின்றுவிட்டால் நன்கு பரிசீலித்த பின்பே இணைக்க வேண்டும். இதை பலமுறை சொல்லி இருக்கிறேன். இந்த ஜாதகத்தில் 7ல் சூரியன் 12க்குடையவன் வீற்றிருக்க, 7ம் அதிபதி வியாழனோ 3ல், ஆனாலும் 7ம் இடத்தை பார்த்திருக்கிறார். இருந்தாலும் என்ன பயன் வியாழன் வக்கிரமாக இருக்கார். களத்திர தோஷம் இதிலேயே பின்ன ஆரம்பித்து விட்டது பாத்தாயா. முதலில் குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் 6ல் எனவே சிறப்பான குடும்பம் அமையாது என்று அப்பவே சொன்னேன். அந்த சுக்கிரனே களத்திரகாரகர் ஆகி 7க்கு 12ல் மறைந்தே விட்டார். சுக்கிரன் பொதுவாகவே நல்ல இடங்களில் இருந்தால் தான் ஒழுங்கான

கணவன் மனைவி அமைய முடியும்.

மேலும் மாங்கல்ய ஸ்தானமான 8ல் சனி, 8க்கு 8ல் வியாழன் நின்று விட்டார்.
இன்னொரு திருமணம் செய்யலாம் என்றால் 11க்குடைய சந்திரனும் அஷ்டமத் தில் நின்று ஆட்டம் கண்டுவிட்டார்.
அஷ்டமாதிபதி செவ்வாயோ நாலில் நின்று இவரின் சுகஸ்தானத்தை தடை செய்கிறார். விதிதான் சரியில்லை மதியாவாது நன்றாக உள்ளதா என்றால் ஒரளவு பரவா யில்லை. ராசிக்கு 8ல் மட்டுமே 8க்கு உடையவருடன் வியாழன் பரிவர்த்தனை பெற்று உள்ளார்.
இதனாலேயே கணவர் சிறப்பாக இருக்க வில்லை. கணவர் மனைவியிடம் எதையோ எதிர்பார்க்கிறார். அது மனைவியிடம் இருந்து கிடைக்கவில்லை. எனவே தடம் மாறிவிட்டார் என்று ஒரே வரியில் பதில் சொல்லி விடலாம்.
இவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் 5ல் ராகு, 5க்குடையவன் நீசம், பூர்வ ஜென்ம கர்மதோஷம் சமீப காலமாக பூர்வஜென்ம கர்மதோஷம் என்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். திதி, தர்ப்பணங்களை விடாமல் செய்யுங்கோ.

குடும்பத்திற்கு நல்லது கீழ் வாரிசுகள் நன்னா இருப்பா என்று. இத்தனை தோஷங்களும் அதாவது, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம கர்மதோஷம், குடும்ப தோஷம், சுகஸ்தானத்தில் தோஷம் என பல தோஷங்களின் பிடியில் சிக்கி உள்ளது இவ ஜாதகம். பார்த்தாயா பிச்சுமணி என்ற உடன் இருவரும் கண் கலங்கி விட்டனர்.
சரி. .. சுக்கிரனின் விசேஷ தன்மைகளை சொல்றேன் கேட்டுக்கோ.
1. சுக்கிரன் களத்திரஸ்தானத்தில் அமர்ந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.
2. சுக்கிரனுக்கு ஏழில் பாபிகள் இருந்தால் தாமத திருமணம் ஏற்படும்.
3. சுக்கிரனுக்கு இருபுறமும் பாபிகள் இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும்.
4. சுக்கிரன் 6,8,12 போன்ற இடத்தில் இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும்.
5. சுக்கிரன் நீசம் (அ)பகை கிரகத்தோடு இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும்.
6. லக்னாதிபதி கேந்திரத்தில் அமைந்து சுக்கிரன் 2ல் இருந்தால் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும்.
7. சுக்கிரனுக்கு ஏழாம் வீட்டில் செவ் வாய்- ராகு இருப்பின் கலப்பு திருமணம் ஏற்படும் அல்லது மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பார்.
8. லக்கினத்திற்கு 7ல், சந்திரனுக்கு 7ல், சுக்கிரனுக்கு 7ல், சனி, ராகு இருப்பின் ஆண்மை இருக்காது.
9. சுக்கிரன் – குரு சேர்க்கை சுகம் அனுப விக்க முடியாது.
10. ஒருவர் ஜாதகத்தில் களத்திர காரகனான சுக்கிர கிரஹம் மறைந்து விடில், மண வாழ்க்கை ருசிக்காது. சோபிக்காது, சுக்கிரனுக்கு 7ல் ராகு, கேது, சனி சூழ்ந்து விட்டால் மண வாழ்வு கானல் நீராகிவிடும்.
11. ஏழரை சனி நடைபெறும் போது குரு பலம் இல்லாமல் திருமணம் நடைபெற்றால், ஏழரைச் சனி காலத்திலேயே களத்திர தோஷம் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
12. சுக்கிரன் சந்திரனுக்கு 7ல் அமையப் பெற்றால் தாமதமாக திருமணம் நடைபெறும்.
13. ஒருவருக்கு இருந்து, மற்றொருவர்க்கு இல்லையேல் மணவாழ்வு பாதிக்கப்படுகிறது.
14. சுக்கிரன் 4,7,10ல் கேந்திரத்தில் இருப்பின் கேந்திர தோஷம் ஏற்படுகிறது. திருமணத் தடை ஏற்படும்.

சுக்கிரனுடன் இணையும் கிரகத்தைக் கொண்டு, வரும் மனைவியின் குணத்தை அறியலாம்.
சுக்கிரன் – குரு, இணையின், பக்திமான், தருமவான், தயாள குணமுடையவள்.
சுக்கிரன் – புதன் சேர்ந்திருப்பின், புத்திசாலி, கல்விமான், திறமைசாலியாக இருப்பாள்.
சுக்கிரன் – சந்திரன் சேர்க்கை, குணவதி, காம உணர்ச்சி மிக்கவள், தாம்பத்தியத்தில் அதிக ஈடு உடையவள்.

சுக்கிரன் – சூரியன் இணைவு, கோப குணமுள்ளவள், மூர்க்கத்தனமுள்ளவள், சதா சர்வகாலமும் குற்றம் கண்டு பிடிப்பவள்.
சுக்கிரன் – செவ்வாய் சேர்க்கை, பிடிவாதக்காரி, சண்டை சச்சரவு, அடிதடிகள் செய்பவள், வம்பு, வழக்கு என்று இருப்பவள், காம உணர்ச்சி மிக்கவள்.
சுக்கிரன் – சனி சேர்க்கை கடினமான உழைப்பவள், வயதுக்கு முதிர்ந்த தோற்றமுடையவள். காம உணர்ச்சி மிக்கவள்.
சுக்கிரன் – ராகு இணைப்பு சதாபோக இச்சைக்கு அலைபவள், தாழ்ந்த மனப் பான்மை உள்ளவள், தாழ்ந்தவர்களோடு இணைபவள்.
சுக்கிரன் – கேது சேர்க்கை, நல்லபோகி, யோகிபோல் இருந்து போகம் புரிபவர்கள், காம உணர்ச்சிக்கு கட்டு படாதவர்கள் நீச செயலில் ஈடுபடுவார்கள்.

இல்வாழ்வு மிக இனிமையான வாழ்க்கை அமைய, மேற்கூறிய முறையை இனியாவது அனுசரிப்போம். நல்ல வரன்களை தேர்ந்தெடுப்போம். அப்போதுதான் இல்லற வாழ்வு இனிமையாக அமையும்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
98417 89483