Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்,

mungil3

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில், தேவதானப்பட்டி,தேனி.

கதவுக்கு மட்டுமே பூஜை மட்டுமே பூஜை செய்து வழிபடும் அபூர்வ கோவில்

பிரார்த்தனை: திருமண பாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்க, மனக்குறையைத் தீர்க்க சாபவிமோசனம் அடைய, ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம்.

 இருப்பிடம் : தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் தேவதானப்பட்டியில் அமைந்துள்ளது. இங்கிருந்து வடக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் இருக்கிறது.

ஆலயங்களில் அனைத்திலும் மூலவர் வழிபாடு வழக்கத்தில் இருக்கும் ஒன்றாகும். தினசரி பூஜைகளும், அபிஷேகங்களும் மூலவருக்கு நடை பெறும். விழாக்காலங்களில் வீதி உலா வருவதற்காக உற்சவர் சிலைகளும் கோவில்களில் இருக்கும்

ஆனால் மூலவர் சிலை வழிபாடோ, உற்சவர் சிலை வழிபாடோ இல்லாமல், மூலவர் கருவறையின் கதவுக்கு மட்டுமே பூஜை செய்து வழிபடும் அபூர்வ கோவில் ஒன்றும் இருக்கிறது

கோவில் தோற்றம்: அந்த கோவிலின் சிறப்பு பற்றி இங்கு காணலாம். அசுர ஆட்சி வங்கிசபுரி நகரில் சூலபாணி என்ற அசுரன் ஆட்சி செய்து வந்தான். அவன், சிவபெருமானிடம் வரம் பெற்று வஜ்ஜிரதத்தன் என்ற மகனைப் பெற்றான். தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்த வஜ்ஜிரதத்தன் நாட்டு மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான்.

பாதிக்கப்பட்ட தேவர்களும் ரிஷிகளும் பிரம்மாவிடம் முறையிட்டனர். அசுரனுடன் தேவேந்திரன் போர் செய்வது என்று முடிவானது. முழு பலத்துடன் போரிட்டும் இந்திரனுக்கு தோல்வியே மிஞ்சியது. இதையடுத்து இந்திரன் அன்னை காமாட்சி தேவியிடம் அடைக்கலம் புகுந்தான். காமாட்சி அன்னையோ, துர்க்கையை போருக்கு அனுப்பிவைத்தாள்.

mungil1புலித் தலை, கரடித் தலை, காட்டெருமைத் தலை என பல அவதாரம் எடுத்து போரிட்டதால், துர்க்கையால் அசுரனை அழிக்க முடியவில்லை. இதனால் காமாட்சி அன்னையே நேரடியாக போர்க்களம் புகுந்தாள். அசுரனின் ஒவ்வொரு தலையையும் அன்னை வெட்டி வீழ்த்த, அந்த தலைகளை துர்க்கை தன் காலால் மிதித்து அழித்தாள்.

இறுதியில் வஜ்ஜிரதத்தன் உயிர் நீத்தான். அசுரனை அழித்த பாவத்தை போக்குவதற்காக, அன்னை காமாட்சி, வங்கிசபுரி அருகே ஓடிய வேகவதி நதிக்கரையில் தவம் இயற்றினாள். அன்னையை மகிழ்விக்க, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மக்கள் அபிஷேகம் செய்தனர்.அதனால், நதியும் மஞ்சளாக மாறி மஞ்சள் ஆறு எனப் பெயர் பெற்றது. இந்த நதி பலருக்கும் பாப விமோசனம் தந்து காத்தது.

வங்கிசபுரி, ராஜ கம்பள நாயக்கர் ஜமீன் ஆட்சியின் கீழ் இருந்தது. ஜமீனைச் சேர்ந்த மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்ற போது, கன்று ஈனாத பசு ஒன்று தினமும் மந்தையை விட்டு விலகி சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வருவதை மேய்ச்சல் பணியில் இருந்தவர் அறிந்தார்.
mungil2இதனால் மறுதினம் அந்த பசுவை பின்தொடர்ந்து சென்றான். சிறிது தூரம் சென்றதும் மூங்கில் புதரில் ஒளி வீசும் பெண் ஒருத்தியிடம், அந்தப் பசு தன் பாலை சுரந்தது. அதனை அந்தப் பெண் அருந்தினாள். பெண்ணின் மீது வீசிய தாங்க முடியாத ஒளியின் காரணமாக மேய்ச்சல்காரர் கண் பார்வை இழந்தார்.

பின்னர் தட்டுத் தடுமாறி ஜமீனிடம் சென்று நடந்ததைக் கூறினார். ஜமீன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு ஓர் அசரீரி ஒலி கேட்டது. ‘வஜ்ஜிரதத்தனை அழித்த தோஷத்திற்காகவும், சாந்திக்காகவும் தவமிருந்த போது, ஏற்பட்ட பிரகாசம் தாங்காமல் மேய்ச்சல்காரனிர் பார்வை பறிபோனது

இன்னும் ஒரு வாரத்தில் பெருத்த வெள்ளம் ஏற்படும். அந்த வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து நான் மிதந்து வருவேன். எந்த இடத்தில் மூங்கில் புதர் அணையிட்டுப் பெட்டி நிற்கின்றதோ, அந்த இடத்தில் பெட்டியை எடுத்து வைத்து வழிபட்டால் மேய்ச்சல்காரர் பார்வை திரும்ப கிடைக்கும்.

மேலும் அதே இடத்தில் என்னை வைத்து வழிபாடு செய்யுங்கள். கன்னித் தெய்வமான என் அருகில், இல்லறத்தார் யாரும் குடியிருக்க வேண்டாம். நெய் விளக்கு தீபம் மட்டும் ஏற்றுங்கள். தேங்காய், பழங்களை படையல் செய்யுங்கள். அன்னப் படையல் வேண்டாம்’ என்று அசரீரியாக அன்னை கூறினாள்.

தனிச்சிறப்பு : அம்மன் வாக்குப்படியே அனைத்தும் நடந்தது. மூங்கில் பெட்டியில் இருந்த அம்மனை, புல்லால் வேயப்பட்ட குடிலில் வைத்து வழிபட்டனர். அதுமுதல் அன்னை “மூங்கிலணை காமாட்சி” என்று அழைக்கப்பட்டாள். பெட்டியைத் தூக்கிய மேய்ச்சல்காரருக்கு பார்வை கிடைத்தது. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள் பழம், பூ, தேங்காய் வைத்து பூஜை செய்தனர்.

இன்று வரை உடைக்காத தேங்காய், உரிக்காத பழம் போன்றவையே அம்மனின் படையலாக இருந்து வருகிறது. இங்கு காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய்யை, கலயத்தில் ஊற்றிய பிறகு, ஈ, எறும்பு எதுவுமே மொய்ப்பதில்லை என்பதும் தனிச்சிறப்பு.

இந்தக் கோவிலுக்கு பூஜை செய்யும் பணி, மலை மீது குடியிருக்கும் மன்னாடியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் ஜமீன்தாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மன்னாடியார் கோபத்தில் ஆலயக்கதவைப் பூட்டி விட்டு இதை யாரும் திறக்கக் கூடாது என்று கூறிச் சென்று விட்டனர்.

அதுமுதல் கதவு திறக்கப்படாமல், பூட்டிய கதவிற்கே பூஜை செய்யப்பட்டு வருகிறது. ஜமீன் மனைவியான காமாக்காள் தன் ஒரே மகனான பொம்முலிங்கசாமியுடன் அம்மனுக்குத் தொண்டு செய்து வந்தாள். நாளடைவில் அன்னையிடம் நேரில் பேசும் வாய்ப்பைப் பெற்றாள்.

இதனை நம்பாது ஏளனம் செய்த பொம்முலிங்கசாமி இறந்தான். உடனே காமாக்காள், ‘எனக்கிருந்த ஒரு மகனையும் எடுத்துக் கொண்டாயே!. என் மரணத்திற்குப் பிறகு எனக்கு யார் இறுதிகாரியம் செய்வார்கள்’ என்று அன்னையிடம் அழுது முறையிட்டாள்.

அதற்கு அன்னை, ‘வருந்தாதே! உன் இறப்பிற்குப் பின் நாயக்கமாரே உனக்கு திவசம் செய்யச் சொல்வேன். அதன்பின்தான் எனக்கு விழா நடைபெறும்’ என்று வாக்களித்தாள்

விழாக்கள் : “காமாக்காள் சமாதி” கோவிலின் கிழக்கே சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தைமாதம் ரத சப்தமியன்று காமாக்காளுக்கு திவசம் தரப்பட்டு, அன்றே பிரம்மோற்சவ முகூர்த்தக் கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, எட்டு நாட்கள் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது இந்த மாவட்டத்திற்குப் பெரிய விழா என்பது இந்தக் கோவிலுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. அம்மனுக்கு அன்னப்படையல் இல்லை என்றாலும், ஆலயம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானமே அன்னக்காமு என்றழைக்கப்படுகிறது.

astrologer_thetiyur_mahadevமகா சிவராத்திரி விழாவின் போது மதுரை, திண்டுக்கல் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, கம்பம் முதலிய பகுதிகளில் இருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடி மாதம் முதல் மூன்று நாட்கள் ஆடிப்பள்ளயம் விழா நடைபெறுகிறது.

இத்தலத்தை வணங்கும்பேறு எனக்கும் என் துணைவி யார்க்கும் கிடைத்தது.   அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று காமாட்சி அம்மன் அருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்

Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483,7299 424347