Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

Blog Archives

சித்தநாதேஸ்வரர்கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்)

tn5a

மேதாவிமகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கிவந்தார். மஹா விஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப்பிறக்க அருள் செய்யவேண்டும் என்று சிவபெருமானை வேண்டிதவம் இருந்தார்.

திருக்கடையூர்மயானம்

11a

சைவசமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சீபுரம்), காழிமயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் ஆகும்.

மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கி விட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கி விட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம்.

வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்

இறைவன் பெயர் : வாஞ்சிநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர் இறைவி பெயர் மங்களநாயகி பதிகம் : திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் – 1 எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து 28 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் சாலை வழியில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும்.

திருநெடுங்களம், நித்யசுந்தரர் கோவில்

thirunedungulam

கோயில் இரண்டு கோபுரங்களுடனும்,இரண்டு பிரகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளிப் பிரகாரத்தில் அகஸ்தியர் சன்னதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது.

பூனை பூஜித்த ஒரு ஆலயம்

villipakkam1

கயிலையின் காப்பாளரான நந்திதேவரின் சிவபூஜைக்கு உதவிட காந்தன், மகா காந்தன் என இரு சீடர்கள் இருந்தனர். இருவரும் நந்தி தேவரின் சிவபூஜைக்காக ஒருநாள் காலைவேளையில் பூக்களைப் பறிக்க நந்தவனத்துக்குச் சென்றனர்.

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்,

mungil3

கதவுக்கு மட்டுமே பூஜை மட்டுமே பூஜை செய்து வழிபடும் அபூர்வ கோவில். பிரார்த்தனை: திருமண பாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்க, மனக்குறையைத் தீர்க்க சாபவிமோசனம் அடைய, ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம்.

அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவனநாதர்

millai3

பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார்.

பேரையூர் நாகநாதசுவாமி கோவில்

peraiyur5

பேரையூர் நாகநாதசுவாமி கோவில், புதுக்கோட்டை மாவட்டம்

ராகு– கேது தோஷம் போக்கும் திருத்தலம்

பிரார்த்தனை: நாகராஜன்– நாகக் கன்னிகைகள் வணங்கி வழிபட்ட தலம்

திருப்புகலூர்

tpugalur1

வாஸ்து தோஷம் நீங்க, புதிய வீடு கட்டுபவர்கள், சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து செளபாக்கியங்களும் கிடைக்க, திருமணத்தடை நீங்க, சுகப்பிரசவம் ஆக, பாப விமோசனம் பெற…

திருநீலக்குடி

thiruneelakudi2

இறைவன் : ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர் இறைவி : ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி(தவக்கோல அம்மை), ஸ்ரீ அனூபமஸ்தநி (அழகாம்பிகை) இருப்பிடம் : கும்பகோணம் – காரைக்கால் சாலையில்கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி.தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்றதிருநீலக்குடி. அருகில் உள்ள ரயில் நிலையம்: ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடிவர சாலை வசதி உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல்