astrologer_thetiyur_mahadevம்பி ஐயரும், சாம்புவும் காலையில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். ராமசாமி மிகவும் பரபரப்புடன் வழி மறித்து “ஜோஸ்யர் மாமா ஊரில் இருக்காரா தெரியுமா…….. என்று கேட்டார்.

நாங்களும் அவரைப் பார்க்கணும் ……..ரொம்ப நாளாச்சு………”என்ன விஷயம்” என்று கேட்டார் அம்பி ஐயர்.
ராமசாமி தலையை சொரிந்து கொண்டு ஒன்றுமில்லை………நமக்கு வேண்டிய நண்பர் பெண் ரொம்ப நாளா காணலையாம்….. அது விஷயமாக ஜாதகம் கொடுத்து அனுப்பியிருக் கார். ஜோஸ்யர் மாமாவை கேட்டால் விளக்கமாக சொல்வாரே என்று தான்……….
நாங்கள் வாக்கிங் முடித்து திரும்பி வரும்போது போகலாம். அதுக்குள் அவர் பூஜை முடித்து இருப்பார் என்று கூறி தன் பயணத்தை மேலே தொடர்ந்தனர்.
திரும்பி வரும்வரை ராமசாமி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். வாசலில் பெல் சத்தம் கேட்டதும் ஜோஸ்யர் மாமா யாரது………. என்று குரல் கொடுத்தார்.

நான்தான் சாம்பு என்றார்.

நம்ம ராமசாமிக்கு ஏதோ சந்தேகம் கேட்கணுமா. . . . . . . . . அது விஷயமா பார்த்துட்டு போகலாம்னு . . . . . . என்று இழுத்தார்.

என்ன ராமசாமி? என்ன பிரச்சனை சொல்லு என்று கூறியவுடன் தனது மஞ்சள் கைப்பையிலிருந்து ஒரு ஜாதக புக்கை எடுத்து நீட்டினார். அந்த ஜாதகத்தை பார்த்ததும் ஜோஸ்யர் முகம் வேறுபட்டதை உணர முடிந்தது.

அடடா…. இது ஒரு மோசமான ஜாதக மாச்சே ராமசாமி. . . . இதைப் போயி என்று இழுத்தார். ஜோஸ்யர் மாமா…….ம். சரி கொடுத்துட்டே, பார்த்து பலன் சொல்லறேன் கேட்டுக்கோ என்று கூறி ஆரம்பித்தார்.
இந்த ஜாதகத்திலே யோகாதிபதின்னு சொல்லக்கூடிய பாக்யாதிபதியான சூரியனும், (9க்கு குடையவர்) லக்னாதிபதியான குருவும் பா¢வர்த்தனை பெற்று உள்ளனர். இந்த பெண்ணுக்கு 18 வயசிலே கல்யாணம் ஆகி யிருக்கணுமே? சனி தசை வந்த சமயத்துலே இந்த பெண் கணவனை விட்டு வேறு எவனு டனோ ஓடிப் போயிருக்கணும். வெறுமனே போனா பரவாயில்லையே, இருக்கிற நகை நட்டு பணம் எல்லாத் தோடையும்னா போயிருக்கும்.

பாக்கியாதிபதியான சூரியன் கேது சாரம் பெற்றுள்ளார். லக்னாதிபதி குரு 6-11க்கு குரிய சுக்கிரன் சாரம் பெற்று 5-12க்குகுரிய செவ்வாயுடன் சேர்ந்து சந்திரனுக்கு 7 ல் வந்ததால் 1-9க்கு குரிய பரிவர்த்தனை அவயோகத்தன்னா கொடுத்துடும். லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்திலே பாக்யாதிபதி, பாக்யாதிபதி யின் சாதக தாரையில் லக்னாதிபதி இருந்தால் லக்னாதிபதியின் போராட்டத்தை பாக்யாதி பதி சாதகமாக்கிக் கொண்டு லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் அதிபதியான சுக்கிரனின் தன்மையை வெளிப்படுத்தி இருக்கான் பாருங்கோ. 6க்கு குடைய சுக்கிரன் சரராசியில் மகரத்தில் இருந்து அந்த வீட்டுக்கு குடைய சனி களத்திர ஸ்தானாதிபதியான புதனை பார்த்ததால் கள்ளத்தனமாகவும், வேறுவிதமாக விபசாரம் கூட செய்வாள் என்று அடிக்கடி சொல்வேனே ஞாபகமிருக்கா அதே மாதிரி தான் இந்த ஜாதகமும்.

இதுலே என்ன வேடிக்கைன்னா இந்த ஜாதகத் திலே உள்ள யோக பாவத்தைப் பாருங்கோ. குருவும், செவ்வாயும் சேர்ந்து குருமங்கள யோகம் ஒன்று. சந்திரனுக்கு 7லே குரு வந்துள்ளது கஜகேசரி யோகம் வேற.

குருவும் செவ்வாயும் 6க்கு குடைய சுக்கிரனது நட்சத்திரத்தை பெற்றுள்ளார். பாக்யாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தை சந்திரன் பெற்று இவரின் அசுப தாரையில் குருவும்-செவ்வாயும் சேர்ந்துள்ளதால் மேலே சொன்ன யோகங்கள் ஜாதகிக்கு செயல் படாமல் போயிடுத்து பார்த்தேலா.

என்ன பண்றது. தலை எழுத்த மாத்த முடியுமா? அனுபவிச்சுதான் தீர்த்தாகனும் அதுவிதி. வேற வழி இல்லை. நான் தான் அடிக்கடி சொல்வேனே எந்த ஜாதகத்திலேயும் பாக்யாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்திலே சந்திரனோ, சந்திரனோட எதிரிடை நட்சத்திரத்தை பாக்யாதிபதியோ பெறுவதும் கூடாது. அதேபோல லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தை சந்திரனோ பாக்யாதிபதியோ பெறுவது கூடாது.

இப்படி அமைந்தால் அவர்களின் பாக்யத்திற்கு ஏதோ ஒரு வழியில் அவமானம் இழுக்கு) ஏற்பட்டு விடுகிறது பார்த்தேளா. இதுதான் என்னுடைய குருநாதர் எனக்கு உபதேசித்த அனுபவபாடமாகும்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
98417 89483