sadguruஇன்று நிறைந்த கார்த்திகை பவுர்ணமி..!

மிக நல்ல அதிர்வுகள் பிரபஞ்சத்தில் சூழ்ந்திருக்கும் ஒரு பொன்னான நாள்…

இன்று முழுவதும் கூடிய வரை மவுனவிரதத்தில் இருந்து குருவின் நாமத்தை இடை விடாமல் உச்சரித்துக் கொண்டே இருப்போம்…

10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தரிசிக்கும் போது எங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மிக சந்தோஷமாக மாற்றி அமைத்தார்..

எங்களால் என்றும் மறக்கமுடியாத சந்தோஷமான நிகழ்வுகளில் அது ஒன்று… ஆம்.. குருவிடம் கொடுக்கும் உண்மையான சரணாகதி நம் வாழ்க்கையை மிக அழகாக வழி நடத்திச் செல்கிறது..

அவரிடம் சரணாகதி கொடுத்த நாளிலிருந்து இன்றுவரை சுயநலமாக எந்த ஒரு வேண்டுகோளையும் அவர்முன் வைத்ததில்லை… ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் எல்லாமே தேவைக்கும் மேலேயே தானாகவே கிடைக்கிறது… அதிகம் அவரைப் பற்றிய புத்தகங்களோ ஒலி நாடாக்களோ படித்ததும் இல்லை, கேட்டதில்லை…

நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற சுள்ளென்ற அனுபவங்கள்… ஒன்றிரண்டு அல்ல… முதல் முறை அவர் பாதங்களில் மிக ஆத்மார்த்தமாய் விழுந்து, அழுது அவருடன் கலந்து சரணாகதி கொடுத்த நாளிலிருந்து இன்றுவரை எனக்கு அவர் கற்றுக் கொடுக்கும் பாடங்களுக்கும் அனுபவங்களுக்கும் நிகர் வேறு எதுவும் இல்லை…

நிச்சயமாக குருவை கெட்டியாக பற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இதுமாதிரி ஓராயிரம் அனுவங்களும் பாடங்களும் புதைந்து கிடக்கும்…

ஆம்… நிச்சயமாக குரு இதுமாதிரி உள்ளுக்குள் ஏற்படுத்தும் தூய்மையான அன்பையும், சுய நலமின்மையையும், அமைதியையுமே நான் கடவுளாக கருதுகிறேன்… கற்சிலைகளை அல்ல..!