Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
98417 89483
ராமசாமி மிகவும் குழப்பத்திலிருந்ததால் வாசலில் ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டு இருந்தார்.
அம்பி ஐயரும், சாம்புவும் வாக்கிங் செல்லும் போது இதை கவனித்துக் கொண்டு சென்றனர்.
“என்ன சாம்பு——- நம்மளை கவனிக்காம ராமசாமி ஊஞ்சலில் ஆடிண்டு இருக்கான்” என்றார் அம்பி ஐயர்.
“வேற என்ன? ஏதாவது கோபமா இருக்கும் சரி விடு” என்று தொடர்ந்தனர்.
ஊஞ்சலின் வேகம் அவரது மனம் கொந்த ளித்துக் கொண்டு இருந்ததை காண்பித்தது. அவரால் கோபத்தினை வெளிக் காட்ட முடிய வில்லை.
அவரது மனைவி பட்டு மாமி அடுக்களை யில் கேவிக் கேவி அழுது கொண்டு இருந்தாள்.
ராமசாமிக்குத் தெரியும் கோபத்தை வெளிக் காட்டினால் அது நேரடியாக அவளை பாதிக்கும் என்று.
வயதான காலத்தில் இப்படி ஒரு சோதனை வரணுமா, உள்ளே இருந்து வந்தது மாமியின் குரல்.
பட்டு மாமியின் கண்கள் கோவைப் பழமாய் சிவந்து இருந்தது.
“இந்தாங்கோ—— காபியை குடிச்சுட்டு யோசனை செய்யுங்கோ” என்று நீட்டினாள்.
“ராமசாமி உடனே நீ சாப்பிட்டாயா” என்று இழுத்தார்.
பாவம் அவ என்ன பண்ணுவா– என்ன சுகத்தை கண்டா. எனக்கும் பெண் ணுக்கும் உழைச்சு உழைச்சு தேஞ்சதுதான் மிச்சம்.
அவர்களது பெண் காமாட்சி குளிச்சு வெளியே வரும் நேரம் ஏன்னா…… அவள ஏதாச்சும் கேட்க போரேளா?
என்னால இதை ஜீரணிக்கவும் முடியல- தாங்கிக்கவும் முடியலை…..
நாசுக்காக கண்களை துடைத்துக் கொண் டாள். என்ன யோசனை….. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.
காமாட்சி ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் நல்ல சம்பளம். கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார் ராமசாமி
அந்த நேரத்தில் தான் கிருஷ்ணசாமி காமாட்சியை ஒரு பையனுடன் நெருங்கி பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததாக சொன்னார். ஆனால் ராமசாமியால் அதை நம்ப முடியவில்லை.
நம்ம பொண்ணா………….. இப்படி… சேச்சே.. இது மாதிரி எல்லாம். நாம எப்படி பாசத்தை கொட்டி வளர்த்து இருக்கோம். அடுத்த நிமிடம் மனது வேறு விதமாக யோசித்தது. கை நிறைய காச பார்த்ததும் அவமனது இப்படி…. ஆனா நாம மாப்பிள்ளை பார்ப்பது அவளுக்குதான் தெரியுமே.
இப்படி இருந்தும்….. அவ எடுத்த முடிவு தப்பா? நாம எதிர்பார்க்கிற மாதிரி பையன் அமைய டிலே ஆரதே அது தப்பா? ராமசாமி ரொம்பவும் குழம்பிப் போனார்.
கிருஷ்ணசாமி சொன்னதை பட்டுக் கிட்டே சொன்னதிலிருந்து அவவேற ஒன்னும் புரியாம புலம்பிக்கிட்டு இருக்கா.
காமாட்சி குளித்து வெளியில் வரும்போது வீடே நிசப்தமாக இருந்தது.
அவளுக்கு ஒன்றும் புரியலை. எப்பொழுதும் டி.வி. சத்தம் கேட்டு பழகிப் போச்சு அவளுக்கு. என்னம்மா உடம்பு ஏதாவது சரியில்லையா— கேட்டதுக்கு ஒன்றும் பதில் வரவில்லை.
அப்பா…….. என்ன ஆச்சு? நீங்களும் ஒன்னும் பேசாம வாசல்ல ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆடிண்டு இருக்கேள்.
ராமசாமிக்கு பொறுக்க முடியவில்லை… ஏம்மா நீ யாரையாவது லவ் பண்றீயா, நேரடியாக கேட்டவுடன் சற்று நிலை குலைந்து ஏம்பா இப்படி கேட்கிறேள்…
யாரம்மா அவன்….. நம் குடும்பத்துக்கு இது சரி பட்டு வராதும்மா….
உன்னை படிக்க வச்சு ஆளாக்கின எனக்கு தெரியாதா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க. அதுக்குள்ளாற இது எதுக்கும்மா.
அப்பா லவ் பண்றது தப்பில்லேப்பா. அவரை எனக்கு பிடிச்சு இருக்கு.
எனக்குன்னு சில ஆசைகள் இருக்கு அவரைத் தான் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன். என்னை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்கோ.
உங்க ரெண்டு பேரோடையும் 25 வருட காலம் வாழ்ந்து விட்டேன். பிறகு உள்ள காலம் பூரா நான் கட்டிக்க போறவனோடதான் வாழணும் குறைஞ்சது 40 வருடமாவது. அப்படி இருக்கும் போது என்னோட வாழ வேண்டியவனை நான் தேர்ந்து எடுக்கறதுல என்ன தப்பு. நான் தப்பானவனை தேர்ந்து எடுத்து என் வாழ்க்கையை கெடுத்துக்க மாட்டேன். அது உறுதி என்று கூறிய உடன் ராமசாமி சற்று நிதானிக்க ஆரம்பித்தார்.
சே……… என்ன வாழ்க்கைடா இது. நாந்தானே வாழப்போறேன். இவா எதுக்கு இப்படி………….. என்று அலுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து படுக்கையில் குப்புறப்படுத்துக் கேவினாள்.
சாம்பு திரும்பி வரும்போது ராமசாமி ஊஞ்சலில் அமர்ந்தபடி இருந்தார்.
அம்பி ஐயர் என்ன ராமசாமி மூஞ்சியே சரியில்லை. என்ன ஆச்சு என்றார்.
ராமசாமி விஷயத்தை சொன்ன உடன் “அட இதுக்கா கவலைப்படறே. நம்ம ஜோசியர் மாமாகிட்டே போய் கேட்டா எல்லாம் சரியாயிடும். அவர் பூஜையை முடித்த உடன் போகலாம். நீ போய் குளிச்சிட்டு வா” என்றார்.
பிறகு தான் ராமசாமிக்கு ஒரு புது தெம்பு வந்தது.
வாசலில் பெல் சத்தம் கேட்டதும் ஜோஸ்யர் மாமா “யாரது…..”என்று குரல் கொடுத்தார்.
நான் தான் சாம்பு என்ற உடன் கதவை திறந்து என்ன சாம்பு எப்படி இருக்கே? ஏன் ராமசாமி மூஞ்சி எல்லாம் வீங்கின மாதிரி இருக்கு. என்று விசாரித்தார்.
அது ஒன்னுமில்லை. அவன் பெண் ஜாதகத்தை பத்தி தெரிஞ்சுக்கணுமா என்ற உடன்………….. ராமசாமியும், பட்டு மாமியும் சேர்ந்து ஜாதகத்தை நீட்டினார்கள்.
ஜாதகத்தை வாங்கி பார்த்து விட்டு என்ன…….. பொண்ணு யாரையாவது லவ் பண்ணறாளா என்ற உடன் தூக்கி வாரி போட்டது பட்டு மாமிக்கு.
உன் பெண்ணோட ஜாதகம் துலா லக்னம், தனுசில் சந், கும்பத்தில் – கேது, சூரி, புதன், மேஷத்தில்- சுக், சிம்மத்தில் குரு, ராகு, செவ், கன்னியில் – சனி, சரி……
நவாம்சத்திலே- மகர லக்னம், லக்னத்திலே சனி, மீனத்தில் புதன், ரிஷப- செவ், ராகு, மிது- சூர், குரு, கடக- சுக், கன்னி சந், விரு- கேது,
5ம் வீட்டுக்கு உரிய சனி 12ல் மறைஞ் சுட்டான். இது ஒரு பிளஸ் பாயிண்ட். களத்திரஸ்தானாதிபதி செவ் 5ம் இடத்தை 7ம் பார்வையா பார்ப்பது காதல் உணர்வுகளை தூண்டும். லக்னத்துக்கு 12ல் செவ் பலம்
பெற்றும் 9க்கு உடைய புதன் 5ல் பலமாய் அமர்ந்து 7ல் லக்னாதிபதியும் களத்திரகாரகன் சுக்ரன் அமர்ந்தும் 5-7-9 ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு காதல் கல்யாணத்திற் கான யோக நிலையை தெரியப்படுத்துகிறது. இது என்னோட அனுபவ பாடமாச்சே ராமசாமி.
களத்ரஸ்தானாதிபதி செவ் கேது சாரமேறி கேது 5ல் செவ்வாய் சாரமேறியதையும் கவனத் தில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.
அம்ச லக்னத்தில் சனியும் 7ல் சுக்ரனும் இருப்பது இப்படி குழப்பத்தை தான் தரும் ராமசாமி. காதல் என்பது இந்த ஜாதகப்படி உண்டு. ஆனால் காதல் வெற்றி பெறுமா? என்று பார்க்கும் பொழுது உன் பெண்ணுக்கு தைரியம் ரொம்ப ரொம்ப அதிகம். 11ல் வலுப்பெற்ற செவ் இருப்பதால் தான் எடுக்கும் முடிவில் பின் வாங்க யோசிப்பாள். அவ் வளவுதான். 5-7-9 வீடுகளுடன் தொடர்பு கொண்ட கிரஹங்கள் அப்படித்தான் செய்யும். விடு மேலே பார்ப்போம்.
லக்னத்திற்கு 3,6க்குடைய சுப பாவியான குருவின் சேர்க்கை 7ம் அதிபதி செவ்வாயோ டன்னா இருக்கு. அவனால ஆனது கொஞ்சம் பிரச்சினை பண்ணாம எப்படி இருப்பான். ஆனா முடிவு சுபமா இருக்கும் கவலைய விடு.
5க்கு உடைய சனி காதல்ல வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சரி. . . . ஆனா சனியோ 12ல போய் மறைஞ்சுட்டான்.
துலா லக்னத்துக்கு 9க்கு உடையவன் புதன் ஆச்சே. உன்னோட (தந்தை) முடிவ பொருத்தே கல்யாணம் அமையும். அப்புறம் உன் சௌகர்யம். இதுவும் என்னோட சொந்த அனுபவபாடம் ஆகும். பாவசக்கரத்தில் சூரியன் 6ல் மறைவு. அதனால இதுலே பயப்பட தேவையே இல்லை ராமசாமி. உன் பெண் நல்ல இடத்திலேதான் பார்த்து இருப்பா. அவ பார்த்த பையனையே கல்யாணம் பண்ணி வெச்சுடு. நன்னா இருப்பா. இதுக்கு போய் கண் கலங்கிண்டு. மனசை தேவையில்லாமல் அலை பாய விடாதே. அந்த பையனை பார்த்து பேசு.
பிறகு அவா அப்பா, அம்மா கிட்ட போய் பேசு. எல்லாம் நன்னா நடக்கும்.
மாமிக்கு இருக்கும் கோபம் நியாயமானது தான் என்றாலும் அவ எடுத்த முடிவ நீங்க மாத்தி அதனால வர பின் விளைவையும் கொஞ்சம் யோசிக்கணும். எல்லாம் பேரன்/பேத்தி பொறந்தா சரியாயிடும். கவலைப் படாதே என்று கூறியதும் பட்டு மாமிக்கு மனது சற்று சமாதானமானது.
15 நாட்களுக்குள் ஜோஸ்யர் மாமா சொன்னது போல அவள் பார்த்த கண்ணனுக் கும் – காமாட்சிக்கும் வெற்றிகரமான முறையில் நவம்பர் 2011ல் ஜோஸ்யர் மாமா முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
அப்பொழுது ஜோஸ்யர் மாமா தன்னு டைய அனுபவ பாடத்தை நினைத்து தன்னை யும் அறியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தபடி ஆசிர்வதித்தார்.