திருவதிகை வீரட்டேஸ்வரர்- பெரியநாயகி, திரிபுரசுந்தரி
கடலூர் மாவட்டம்
இந்தஇறைவனைவழிபடுவோர்க்குஆணவம், கன்மம், மாயைஆகியமும்மலங்களும்நீங்கும்
மூலவர்: வீரட்டானம், வீரட்டேஸ்வரர்
சுவாமியின்பிறபெயர்கள்: ஸ்ரீசம்காரமூர்த்தி – கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)
அம்மன்/தாயார்: பெரியநாயகி, திரிபுரசுந்தரி
தலவிநாயகர் : சித்திவிநாயகர்.
தீர்த்தம்: சூலத்தீர்த்தம், கெடிலநதி
பிறதீர்த்தங்கள் : கிணறுதீர்த்தம், சக்கரதீர்த்தம், குளம், கெடிலநதி
பழமை: 1000-2000 வருடங்களுக்குமுன்
புராணபெயர் அதிகாபுரி, திருஅதிகைவீரட்டானம்
ஊர் திருவதிகை
மாவட்டம் கடலூர்
திறக்கும்நேரம்: காலை 6மணிமுதல் 12 மணிவரைமாலை 5 மணிமுதல்இரவு 8 மணிவரைதிறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகுவீரட்டானேசுவரர்திருக்கோயில், திருவதிகை – 607 106, பண்ருட்டிபோஸ்ட், கடலூர்மாவட்டம் போன்: +91-98419 62089
இருப்பிடம்: சென்னை நெய்வேலி மார்க்கத்தில் உள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு உள்ள திருவதிகைக்கு பண்ருட்டியிலிருந்து நிறைய நகரபேருந்து வசதி உள்ளது. மேலும் கடலூர் நகரிலிருந்தும் வரலாம்.
கோயிலின் அமைப்பு: இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர்வடிவில் உள்ளது.
வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன்முதலானோர்
பாடியவர்கள்: நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வதுதலம்.
திருவிழா: பங்குனி, சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தலநாயகர் வசந்தமண்டபத்தில் எழுந்தருளல் சித்திரைசதயம் 10 நாட்கள்அப்பர் மோட்சம் திருக்கயிலாயகாட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தலநாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10 நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ராதரிசனம் 1 நாள்திருவிழாமாசிமகாசிவராத்திரி 6 காலபூஜை கார்த்திகை 5 சோம வாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமிஅம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தலசிறப்பு: இத்தலஇறைவன்சுயம்புமூர்த்தியாகஅருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில்இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.
.திவதிகைகோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணிதசாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுத மின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்றதலம். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜஇராஜசோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்
முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள்செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே. தேவாரம் முதன்முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன் முதலில் தேர் ஏற்பட்டவரலாறு இதுவே ஆகும். இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான். அட்டவீரட்டானத்தலங்களில் சிறப்புடையது. அட்டவீரட்டானத்தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்டவீரட்டானத்தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது. சிதறு தேங்காய் (சூறைத்தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.
மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆனசுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சிதந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது. கருவறை விமானஅமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.
பொதுதகவல்: திருவதிகைநகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமணமதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவசமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்துவந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்றுவலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது. ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப்போக்கும்படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்ததிருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக்கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது. உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்க கலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்துவந்தார். இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும். திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன்கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
பிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்தநோயானாலும் தீருகிறது. வயிற்றுவலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத்தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்துவிடும். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்கசாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.
குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால்உடனே குழந்தை பேறு உண்டாகும். மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
நேர்த்திக்கடன்: நிலைமாலை சாத்துதல், சுவாமி பொட்டுக்கட்டுதல் அம்பாளுக்கு தாலி கட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதிஅர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல் , சூரைத் தேங்காய் உடைத்தல் ,சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் , வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள்பொடி அபிசேகம், புடவைசாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம் .பஞ்சக்கனிவைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்துநாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்மஉற்சவம் பத்துநாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுரசம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப் பெற்றது.
இந்தஇறைவனைவழிபடுவோர்க்குஆணவம், கன்மம், மாயைஆகியமும்மலங்களும்நீங்கும்.
அம்பாள்சன்னதிசுவாமிக்குவலப்புறம்உள்ளதுதனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்குவந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக ****தீர்ந்து ****விடும். ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்திவாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூசவேண்டும்.
தலவரலாறு: தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன் மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ, கொல்லவோ முடியாது வரம் பெற்றனர். அவர்களால் தொல்லை யடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்குவேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத்தேர்) வரச்செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதிபூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர். தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன்சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரேசமயத்தில் தேவர்கள் அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார்ஈசன்.. மேற்கூறிய புராணவரலாறே திரிபுரசம்காரம் என்றுஅழைக்கப்படுகிறது
அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.
Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304