Divine Astrologer

தேதியூர் V.மஹாதேவன்

98417 89483

ராமசாமிக்கு காலையில் காபி குடித்ததில் இருந்தே வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. சாம்புவாத்துக்கு போகணும் என்று குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டு இருந்தார்.
பர்வதம் மாமி என்னது . . . . இன்னிக்கு இப்படி குறுக்கு நடை பழகுறேள் என்றாள்.
ஒன்னுமில்லை. . . சாம்புவை பார்க்கணும். ஒரு விஷயம் அவரை கேட்டால் தான் புரியும்.
என்ன அப்படி பொல்லாத விஷயம் . . . .
அது ஒன்னுமில்லை. போயிட்டு வந்து சொல்றேன் என்று கூறி கிளம்பினார்.
சாம்பு அப்பொழுது அம்பி ஐயருடன் வாக்கிங் போக கிளம்பிக் கொண்டு இருந்தார்.
என்ன ராமசாமி . . . . .காலையிலேயே பரபரப்பா இருக்கே? என்ன விஷயம் என்று கேட்டார் சாம்பு.
எனக்கு ஒரு விஷயம் புரியலை—– நம்ம குப்பு ஆத்துக்கு நேத்திக்கு போயிருந்தேன். அவா சம்பந்தி வந்திருந்தார். அவர் பேசினதை கேட்டதும் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அது வேஷமா? இல்லை – பாசமா? என்று இது வரையிலும் அவாளுக்குள்ளே சரியான பேச்சு வார்த்தை ரொம்ப நாளா கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி இது மாதிரி . . . . . ஒரே குழப்பமாக இருக்கு.
சரி விடு ராமசாமி. எனக்கு என்ன இதுலே எது பாசம் எது வேஷம்னு தெரியணும். அதானே கவலைய விடு.
ஜோஸ்யர் மாமாக்கிட்டே போனா எப்படி இருந்தால் பாசம், எப்படி இருந்தால் வேஷம்ன்னு கேட்டால் விளக்கமா சொல்லி விடுவர்.
அவர் பூஜையை முடிச்சுட்டு வந்ததும் கேட்கலாம் கவலைப்படாதே என்றார் சாம்பு.
வாசலில் பெல் சத்தம் கேட்டதும் ஜோஸ்யர் மாமா யாரது. . . . என்று குரல் கொடுத்தார்.
நான் தான் சாம்பு என்றார்.
வாங்கோ என்று கதவை திறந்தார்.
என்ன ராமசாமி . . . . .ஏதோ பட படப்பா இருக்காப் போல தெரியுது.
உட்காந்துக்கோ.
சாம்பு…. ஒன்னுமில்லை என்று விஷயத்தை கூறியதும் இவ்வளவுதானா என்று விளக்கி சொன்னார்.
நான் கேட்கரேன்னு தப்பா நினைக் காதே ராமசாமி உறவு முறைகளில் பாசமும், பழக்கத்தில் ஏற்படுகிற பாசமும் மிக பெரிய முன்னேற் றத்தில் இருந்து இறக்கி விடவும், ஏற்றி விடவும் செய்யுது.
பத்து மாதம் வயிற்றில் சுமந்து சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி வளர்க்கிறாள் தாய். தன் வம்சவிருத்தி பெருக வேண்டும் என்ற பாசத்தில் மதிப்பு, மரியாதை, சொத்து சேர்க்கிறார் தந்தை இல்லையா?
ஆமா….
ஆனா பெத்த பெண் கர்ப்பமா இருக்கும் போது அம்மா அவளிடம் காட்டுவது பாசமா, வேஷமா?
அந்த பெண் நல்லபடியா குழந்தை பிறக்கும் வரையில் அம்மாவிடம் அவள் காட்டுவது பாசமா – வேஷமா?
கணவனிடத்தில் மனைவி காட்டுவது பாசமா- வேஷமா?
மனைவியிடத்தில் கணவன் காட்டுவது பாசமா – வேஷமா?
கடவுளை வணங்குவது பாசமா- வேஷமா?
கல்யாணத்திலே பரிசு கொடுப்பது பாசமா- வேஷமா?
உறவு விட்டு விலககூடாது என திருமணம் செய்வது பாசமா- வேஷமா?
சகல வசதி வாய்ப்பு இருந்தும் எதுவுமில்லா தவன் போல் காட்சி அளிப்பது பாசமா – வேஷமா?
ஒரு வித வசதியும் இல்லாதவன் எல்லா வசதி வாய்ப்பு இருப்பது போல பந்தா காட்டுவது பாசமா- வேஷமா?
இப்படி பல விஷயம் சொல்லிண்டே போகலாம் ராமசாமி, பாசமும் வேஷமும் வெகு தூரத்தில் இல்லை. நம்மோடு தான் கலந்து உள்ளது.
நம்பியவரிடத்தில் ஏமாறும் போது சொந்தம், பந்தம், சொத்து, சுகம், எல்லாம் விலகும் போது கூட உண்மையும் பொய்யாக மாறி விடும்.
அப்பொழுது தான் நாம் சிந்திக்கத் தொடங்குகின்றோம். என்ன மாதிரின்னு வச்சுக்கோயேன். அதனால் என்ன. ஏன் சொல்றேன்னா இது எல்லாமே என்னோட சொந்த அனுபவம்.
எதனால நாம் ஏமாந்தோம் ஏன் இந்த சோதனை. எவ்வளவு காலம் இப்படி நாம் போராட வேண்டும். இதை தவிர்க்க என்ன வழி? என பல கோணங்களில் பலநாள் ஆராய்ந்து பார்த்தேன்.
ஒரே வழி. நாம் பிறந்த கால ஜாதக கிரஹ நிலைகள் தான் நன்மையும் தீமையும் செயல் புரியவைக்கிறது. தீமையில் இருந்து விடு பட ஜாதக கிரஹ நிலைகளை நன்கு ஆராய்ந்து செயல்பட்டால் வேஷத்திலிருந்து விடுபட்டு பாசத்திற்கு வரலாம். ஆனா இன்னிக்கு ளுண்மையான பாசம் என்னிடத்தில் காட்ட எவரும் இல்லையேன்னு நான் எவ்வளவோ நாள் வருத்தப்பட்டு வேதனைப்பட்டு இருக்கேன். இன்னமும் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கேன். எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ நல்லது செஞ்சுருக்கேன்.
என்ன பயன். எல்லோரும் வேஷம் தான் போடறா. என்ன பண்றது. காலத்தை அனுசரித்து நாம் தான் போகணும். ரொம்ப வேதனை யாத்தான் இருக்கு ராமசாமி. சரி விடு. கிரஹ அமைப்பு பற்றி சொல்றேன் கேட்டுக்கோ.
1ம்மிடத்து அதிபதி ஆட்சி பெற்றாலும் அல்லது 5,8 இடங்களில் அமர்ந்தாலும் சென்ற இடங்களில் பந்தா செய்யும் பழக்கத்தை உருவாக்கி அதே இடத்தில் கெட்ட பெயர் பெற்று விலகி விடுவார்.
2ம்மிடத்து அதிபதி மறைவு, பகை, நீசம் பெற்றும் அல்லது 2ம்மிடம் நீசம் பெற்றும் அந்த இடத்தில் ராகு, குரு, கேது, சனி இவைகளில் ஒரு கிரஹம் அமைந்து விட்டால் தேவையில்லாத விஷயத்துக்கு பொய் பேசி பாசத்தை காட்டி வேஷம் போடும் தன்மை ஏற்படும். இதனால் கல்வி தடை, குடும்பத்தில் சண்டை, சச்சரவு, குடும்ப பிரிவு ஏற்படும்.
3ம்மிடத்து அதிபதி மறைவு, பகை நீசம் பெற்றால் இளைய சகோதரன், சகோதரி பாசம் காட்டும் போது வேஷம் போடுவார்கள். இதனால் ஏமாறும் நிலை ஏற்படும். இளைய சகோதரன், சகோதா¢ மூலம் எவ்வித அணுகூல பலனும் எதிர்பார்க்க முடியாது.
4ம் மிடத்து அதிபதி பகை, மறைவு, நீசம் பெற்று 4ம் இடத்தில் ராகு அல்லது சனி, குரு, அமைந்தால் தாய் பாசத்தை காட்டுவது போல் வேஷம் போடுவார். தாய்வழி உறவுமுறைகளில் திருமணம் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமாக அமையாது.
5ம்மிடத்து அதிபதி,பகை, மறைவு, நீசம் பெற்று இருக்கும் போது தந்தை வழி, பங்காளி உறவு முறைகள் பாசம் காட்டுவது போல் வேஷம் போடுவார்கள். இதனால் உறவு முறை களில் சங்கடம் வீண் செலவுகள் அவ்வப் போது தொந்தரவு ஏற்படும். தனக்கென்ற அந்தஸ்து இவர்களிடத்தில் கிடைக்காது.
6ம்மிடத்து அதிபதி, ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் ஏறி விட்டால் வினையே வேண்டாம் என்றாலும் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். வீண் வம்பு, வழக்கு, பிரச்சனைகள் கோர்ட், அவமானம், பழி பாவம் தொடர்ந்து வரும் எச்சரிக்கையா இருக்கணும்.
7ம்மிடத்து அதிபதி மறைவு நீசம் அல்லது ராகு, கேது, சனி, குரு, சூரியன் இவர்களில் ஒருவர் அமர்ந்து விட்டால் போதும். காதல், கலப்பு முறையற்ற திருமணம், இதனால் மறுமணம், பின்னர் களத்திரம் பாசம் காட்டுவது போல் நடித்து வேஷம் போட்டு வாழ்வார்.
8ம்மிடத்து அதிபதி, லக்கினத்திலேயோ அல்லது 6,8,12ல் அமர்ந்து இருந்தால் பாசத் தோடு மற்றவரிடத்தில் பழகினாலும் வேஷமா தோற்றம் புரிந்து நற்பெயரை கெடுத்து கொண்டே இருக்கும். தன் போக்கை சற்று மாற்றி கொண்டால் நற்பெயர் பெற முடியும்.
9ம்மிடத்து அதிபதி, பகை, மறைவு, நீசம் பெறும் போது தந்தை பாசத்தை காட்ட மாட்டார். வேஷத்தை அற்புதமாக காட்டு வார். மகன் தந்தையிடம் பாசத்தை காட்டினாலும் தந்தைக்கு வேஷமாக காட்சி அளிக்கும். தந்தை மூலம் எவ்வித பலனும் கிடைக்க வாய்ப்பு இருக்காது. ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறிக் கொண்டே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் தொடரும்.
10ம்மிடத்து அதிபதி மறைவு, நீசம் பகை பெற்றால் எந்த ஒரு தொழில் துறையும் நீடிப்பது இல்லை. பல தொழில் செய்யும் நிலையும் இதனால் தொழில் துறை போலி விளம்பரம் செய்யும் நிலையும் தொடரும். தொழில் துறையில் பாசம் ஏற்பட்டாலும் வேஷமாக வெட்ட வெளிச்சமாக தொ¢யும்.
11ம்மிடத்து அதிபதி மறைவு, பகை, நீசம் பெற்றால் மூத்த சகோதரன், சகோதரி மூலம் பாசம் ஏற்படாது. வேஷம் சிறப்பாக இருக்கும். அதே சமயம், பணம், பொருள்கள் எவ்வளவு சேர்ந்தாலும் தனக்கென்று எவ்வித பாசத் துடன் சேர்த்து வைக்க இயலாது. மற்றவர் பாசத்துக்காக பொருட்களை சேர்ப்பார்.
12ம்மிடத்து அதிபதி, பகை, மறைவு, நீசம் பெறும் போது ஆன்மீகப் பற்று குறைந்து, ஆனால் பாசத்துடன் கடவுளை தரிசிப்பது போல் காட்சி அளிப்பதும் பொ¢யவர்களுக்கு மதிப்பு கொடுப்பது போல் காட்சி அளித்து வேஷம் போடும் நிலையும், பாசமும், வேஷமும் மாறி, மாறி வலம் வரும்.
கிரக நிலைகள் பரிவர்த்தனை பெறும் போது பாசமும், வேஷமும் கலந்தே செயல் புரியும். இப்படித்தான் எனது குருநாதர் எனக்கு உபதேசம் செய்யும்போது கூறிய ஒரு அனுபவ பாடமாகும்.
இப்ப புரிஞ்சுதா என்று கூறியதும் மூவரும் கண் கலங்கியதை காண முடிந்தது.

Divine Astrologer

தேதியூர் V.மஹாதேவன்

98417 89483