Article published in Gnanabhoomi Tamil Monthly – July 2011.
பெங்களூர் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வருகிறோம். கவுண்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு டாக்சிக்காக நிற்கிறோம்.
எங்களை அழைத்த நபர் ஒரு தமிழராக இருந்ததால் மிகவும் வசதியாக போயிற்று. அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே சென்ற போது ரோட்டில் ஒரு நாய் குறுக்கே சென்றது. அதை பார்த்து உடன் சற்று ரோடு ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி கையெ டுத்து வணங்கி விட்டு மீண்டும் வண்டியில் ஏறி அமர்ந்து பயணத்தை தொடர்ந்தார்.
நாங்கள் அவரை வினோதமாக பார்த்து என்ன சுப்ரமணி இப்படி செய்கிறாய், மிகவும் ஆச்சா¢யமாக உள்ளது என்று கூறியவுடன், அவர் வேறு ஒன்றுமில்லை சார். இந்த ஊர்லே எவ்வளவோ கோயில் இருக்கு. ஆனா விசேஷ மான கோயில்னு விரலை விட்டு எண்ணிட லாம். அப்படிப்பட்ட கோயில்ல ஒண்ணு தான் “சுன்சனகிரி” கோயில் என்றார்.
உடனே அவரை நாங்கள் சற்று ஓரமாக நிறுத்து என்று கூறி காப்பி சாப்பிட்டு விட்டு அந்த இடத்துக்கு வண்டிய விடு. அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று கூறிய உடன் சார் நீங்க பத்திரிக்கையில் இருந்து வந்திருக் கீர்களா? என்று கேட்ட உடன் ஆமாம் என்று கூறியவுடன் நானும் உங்களுடன் வந்து எல்லாவற்றையும் விளக்கி கூறுகிறேன் என்றார்.
அதோ கோயில் தெரிகிறது. அங்கு ஒரு பக்தர் நந்தி அருகே நின்று என்ன செய்கிறார். சுற்றி பார்த்து விட்டு அருகில் யாரும் இல்லை என்று தெரிந்ததும் அங்கு உள்ள நந்தியை மெதுவாக தூக்குகிறார். அட கடவுளே என்ன ஆயிற்று இவருக்கு. சாமியை பேர்த்து எடுத்து எங்கு செல்கிறார். ஒருவேளை நந்தியை.. . . . ? சே சே அப்படி இருக்காது என்று நினைத்தவுடன் பக்கத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் இன்னொரு பக்தர் அவசர அவசரமாக நந்தியை தேடுகிறார். அங்கே நந்திக்கு பதில் சிலையாக அமர்ந்து இருந்தது ஒரு நாய். . . . . . !
எங்கே போயிற்று. . . . ? அங்கே எப்படி வந்தது நாய் சிலை? ஆச்சர்யமாக இருக்கிறதா? உடனடியாக நீங்களும் புறப்படுங்கள் “ஆதி சுன்சனகிரிக்கு அது என்ன “சுன்சன்” ஏதோ புரியாத பெயர் போல தெரிகிறதா? அதற்கு காரணம் இரண்டு அரக்கர்கள். புராண காலத்தில் சுன்சா, சன்சா (கஞ்சன் என்று சொல்வார்கள் தமிழில்) என்ற அரக்கர்கள் இந்த மலைப் பகுதியில் மிகவும் அராஜகம் செய்தார்கள்.
இவர்கள் உடலே தீயாக எரியும் படி நின்று கடும் தவம் செய்பவரால் மட்டுமே தங்களை அழிக்க இயலும் என்ற அகம்பாவம். முடிவில் சிவனே முன் வந்து தவம் இருந்து இவர்களை சுட்டெ ரித்தார். இறைத்தீ பட்டதால் அவர்களது மனதில் இருந்த அகம்பாவம் நீங்கி இறைவ னிடம் வரம் கேட்டார்கள்.
இந்த இடம் எங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று. இவர்களின் விருப்பத் திற்கு இணங்கி சுன்சன், சன்சன் என்ற பெயரால் “சுன்சனகிரி” என்பது தற் போது “ஆதி சுன்சனகிரி” என்று உள்ளது.
மகாதேவன் மாதவம் புரிந்த தலம். ஜுவாலா பீடம் என்கிற அக்னி பீடம்.
இதோ வந்து விட்டோம். ஆதி சுன்சனகிரிக்கு. தொலை வில் இருந்து பார்த்தால் திருச்சி மலைக்கோட்டை போலத்தான் தோற்றமளிக் கிறது. பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டாலும் இங்கே ஆறு சிவாலயங்கள் காட்சி தருகின்றன. பாறை களுக்கு இடையே கருவறை யில் கூட வெளிச்சம் இல்லா மல் இருப்பது சோமேஸ்வரு டையதாகும். பக்தர்கள் கையில் விளக்கோடு சென்று இவரை தரிசித்து வருகிறார்கள்.
மலையேறும் வழியில் உள்ள “மல்லேஸ்வரர்” இவரை தரிசித்து விட்டு மேலே நடந்தால் மலையின் உச்சியில் காட்சி தருகிறார் “கவி கங்கா தேஸ்வரர்” இந்த கங்காதேஸ் வரர் கோயிலில் இருந்த நந்தியை தான் ஒருவர் தூக்கிக் கொண்டு இருந்தார். அப்படி ஏன் செய்தீர்கள் என்று அவ ரையே கேட்டோம். அதற்கு அவர் இந்த கோயிலில் வேண்டுதலே நந்தி பகவான் தான் சார். காதுல குனிந்து ரகசியம் மாதிரி சொல்றதில்லை.
அதுக்கு பதிலா நந்தியை அப்படியே தூக்கி கையில வெச்சுகிட்டு மனசால வேண்டுதலை நினைச்சா போதும். நிச்சயமா அந்த கோரிக்கை ஈடேறி விடும். இது என்னோட சொந்த அனுபவம். இங்கு இதுக்கு “கல்லு சேவை”ன்னு பேரு என்று கூறி முடித்தார். சார் நீங்களும் சென்று அவசியம் பிரார்த்தித்து வாருங்கள். உங்களது குறைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.
கங்காதரேஸ்வரர் அருகே ஒரு மூங்கில் தொட்டில் இருக்கிறது. அதை பார்த்து விட்டு வரும்போது எங்களை அழைத்து வந்த டிரைவர். “சார் முன் ஒரு காலத்தில் ஒரு மன்னர் குழந்தை பேறு இல்லாமல் குழந்தை பேறு வேண்டி இவரை வழிபட்டார். மூங்கில் புதர் ஒன்றில் இறைவன் அவருக்கு காட்சி தந்தார். அதற்கு நன்றிக் கடனாக மன்னன் அமைத்தது தான் இந்த கோயில். அவர் நினைவாகத் தான் இந்த “மூங்கில் தொட்டில்” என்றார்.
ஜுவாலா பீடத்தின் அருகே இருக்கிறது “சந்திர மௌலீஸ்வரர்” கோயில். இங்கு ஆத்மார்த்த தெய்வமாக காட்சி தருகிறார். அருகில் இருக்கும் குகையில் இன்றும் ஏராளமான சித்தர்கள் வாழ்வதாக கூறுகின்றனர் இங்குள்ள மக்கள். அவர்களால் வழிபடப்படுபவர் தான் “சித்தேஸ்வரர்”.
இந்த ஆதி சுன்சனகிரியின் இன்றைய பெருமைக்கு காரணமாக இருப்பவர் “கால பைரவர்”.
ஈசன் தவம் புரிந்த காலத்தில் காவலாக இருந்தவர் மற்ற இடங்களை விட அதி நவீனமான முறையில் கோயில் அமைந்திருப்பதும் இவருக்குத்தான். இங்கே தான் கருவறைக்கு முன் நந்திக்கு பதிலாக நாய் வாகனம் இருக்கிறது.
காலபைரவரின் வாகனம் என்பதால் “நாய்” வாகனத்திற்கும் இங்கே சிறப்பு பூஜைகள் எல்லாம் உண்டு. அதுமட்டுமின்றி இந்த தலத்திற்கே அருச்சுனபுரி (அருச்சுனன் – நாய்) என்று மற்றொரு பெயர் உண்டு. தற்போது “அர்ஜுனபுரி” என்று அழைக்கிறார்கள்.
இங்கு அருளாட்சி தரும் அம்பிகை “கம்பத்தம்மா”. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் காட்சி புரியும் அந்த கண் – கண் இமைக்காமல் பார்த்து பரவசப் படும்படியாக உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படுவதாக இங்குள்ள அனைவரது ஒருமித்த கருத்தாக உள்ளது. அப்படியே பிரகாரத்தை வலம் வந்தால் பிரகார தேவதைகள் அனைத்தும் அவ்வளவு வேலைப்பாடுடன் மிக அழகாக தோற்றமளிக்கிறது. கோயிலை விட்டு வெளியேறும் போது எங்கோ ஒரு கூக்குரல் கேட்கிறது. அது வேறு ஒன்றுமில்லை. ஒரு நாயின் கூக்குரல் தான் எங்களை வழியனுப்புகிறது. இவ்வளவு சிறப்புமிக்க க்ஷேத்திரத்தை வழிபட்டு இம்மாதம் அலுவலகம் திரும்புகிறோம்.
கோயில் இருக்கும் இடம்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் மாண்டியா மாவட்டத்தில் நங்கமங்களா தாலுக்காவில் அமைந்துள்ளது தான் இந்த சுன்சனகிரி.