– வனஜா மஹாதேவன்
தேவர்மலை கரூர்- திண்டுக்கல் செல்லும் வழியில் 23 கிமீ தொலை வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பபட்ட மிகப் பழமை வாய்ந்த திருத்தலம்.
மெயின்ரோட்டிலிருந்து 2 கிமீ. நடந்து சென்றால் கண்ணைக் கவரும் ராஜகோபுரம் புதுப்பொலி வுடன் காட்சி தருகிறது. “கமல வல்லித்தாயார் சமேத கதிர் நரசிம்ம பெருமாள் ஆலயம்”.
முன் ஒரு காலத்தில் தினந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டு ஆண்டு முழுவதும் மக்கள் வெள்ளம் திரண்டு வந்து தரிசித்து வந்தனர். தினம் இரவு நேரத்தில் தேவர்கள் வந்து தங்கி இங்குள்ள பெருமாளை ஆராதித்து வந்ததால் இந்த இடம் ‘தேவர்மலை’ எனப்பெயர் பெற்றது.
விஜய நகர பேரரசின் மன்னர்கள் இக் கோயிலுக்கு ராஜகோபுரங்களை யும் பிரகாரங்களையும் நிர்மாணித்து திருக்கோயிலையும் விரிவுபடுத்தியதாக தெரியவருகிறது. ஆனால், காலபுருஷனின் கணக்கு யாரை விட்டு வைத்தது. இறைவனுக்கும் சோதனைக் காலம் வந்தது.
டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காப்பூரின் இரண்டாம் படையெடுப்பின் போது தமிழகம் நிலை குலைந்து நிர்மூல மாக்கப்பட்ட தமிழ்த் திருக்கோயில் களில் ஒன்று தேவர்மலையும் ஆகும்.
கணக்கிலடங்கா ஊர்மக்கள் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத் தால் போதும் என்று பலர் ஊரை காலி செய்து விட்டு வேறு இடங் களுக்கு குடியேறியவர்கள் பலர்.
காலங்கள் மாறின . . . . . .காலபுருஷனின் கணக்குப்படி விடிவுகாலம் வந்தது.
கரூர் மற்றும் தேவர்மலை மக்கள் ஒன்று சேர்ந்து ‘ லெட்சுமி நரசிம்ம ஸ்வாமி பக்த சபா ட்ரஸ்ட்-கரூர் என்ற பெயரில் துவங்கி அல்லும் பகலும் அரும்பாடுபட்டு இக்கோயிலை புனர்நிர்மாணம் செய்து 5.07.2011ல் குடமுழுக்கு விழா இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் நன்மை விளைவிக்கும் என்றாலும்.
ஊர்மக்களை விசாரித்த வகையில் இங்கு போதிய போக்குவரத்து வசதியோ அருகில் அதிக குடியிருப்பு பகுதி இல்லாத காரணத்தாலும் சுற்று வட்டார கிராம மக்களும் வெளியூர் களில் இருந்தும் தான் இங்கு மக்கள் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.
உரிய நேரத்திற்கு அர்ச்சகர்களோ, ஆலய அதிகாரிகளோ தொடர்ந்து இருப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்கின்றனர்.
தாயார் பெருமாள் இருவரது பேரழகை எழுத்தாலோ சொல்லாலோ வர்ணிக்க முடியாது. நரசிம்மரது முகம் மிகவும் சாந்தஸ்வரூபமாக காட்சி தருகிறார்.
அனைவரையும் கவர்ந்து இழுக்கும் காந்தபார்வை ஒய்யாரமாக அமர்ந்து இருக்கும் திருக்கோலம். கமலவல்லி தாயார் கருணை வடிவாக அனைவரது துயர் துடைக்கும் நாயகி யாக காட்சி தருகிறாள். அவளது புன்னகை சிரிப்பு ஒன்றே போதும். சன்னதியை விட்டு வெளியேற மனம் இடம் கொடுக்காது.
இங்கு சிறப்பாக திருமணமாகாத பெண்கள், குடும்ப பிரச்சனை உள்ளவர்கள், குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் அதிக அளவு வருவார்கள் என்றும், தொடர்ந்து போதிய வசதிகளுடன் பராமரிக்கப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் ஊர்மக்கள் கூறு கின்றார். பலநூற்றாண்டுகளுக்கு பிறகு நடை பெற்ற இந்த புண்ணிய குடமுழுக்கு விழாவை கண்டு மனதார நாமும் பிரார்த்திக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பக்த சபா 128,சி, வினிதா டவர்ஸ், 2 வது மாடி, கோவை சாலை, கரூர்-639 002. என்ற விலாசத்திலும் 9443925984, 9940182717 என்ற கைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.