வனஜா மஹாதேவன்
பஞ்சபூதங்கள் சாப விமோசனம் பெற்ற திருத் தலம் பெரும்பாலான மக்களுக்கு பெரியபாளையம் பற்றி தெரியாமல் இருக்காது. அருள்மிகு “பவானி அம்மன்” என்னும் சக்திவாய்ந்த அம்மன் இங்கு குடி கொண்டு ஆட்சி நடத்துகிறாள். இவள் குடி கொண்டிருக்கும் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும் அருள் மழை சுரக்கும். அவளை தரிசிக்க அவள் சந்நிதியை நாடி வரும் மக்கள் கூட்டம் தினம் தினம் ஏராளம். விசேஷ நாட்களில் உள்ளே சென்று திரும்ப பலமணி நேரம் ஆகும்.
இந்நிலையில் இந்த ஆலயத்தின் அருகில் விசேஷமான சிவாலயம் ஒன்று இருக்கிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு குறைவா கவே தெரியவருகிறது என்பது துரதிர்ஷ்டமே!
சென்னையில் இருந்து பக்தர்கள் இந்த சிவாலயத்தை கடந்து தான் அம்மனின் ஆலயத்துக்கு அடியெடுத்து வைக்க வேண்டும். இந்த ஆலயம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீஅன்னபூர்ணாம்பிகா சமேத ஸ்ரீஐமுக்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தை புராணங்கள் போற்றி புகழ்கின்றன.
பஞ்ச பூதங்கள் தன் சாபம் நீங்குவதற்காக வணங்கி துதித்துள்ள னர். புண்ணிய நதியாம் ஆரணிக்கு அந்த பக்கம் அருள்மிகு பவானி அம்மன். இந்த பக்கம் ஸ்ரீஐமுக்தீஸ்வரர் திருக்கோயில்.
ராஜகோபுரம், விமானங்கள், பிரகாரங்கள், ஏராளமான பரிவார தேவதைகள். அருமையான காட்சி. மேற்கு பார்த்த சிவத்தலம்.
உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியை பார்த்தவாறு ஸ்ரீஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆலயத்திற்கு பிரதான நுழைவாயில் மெயின்ரோடு அமைந்திருக்கும் கிழக்கு பக்கம் உள்ளது. வடக்கு பக்கம் ஒரு நுழை வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதியும் விசேஷ நாட்கள் தவிர மற்ற தினங்களில் இந்த வாயில் மூடியே வைத்து இருப்ப தாக கூறுகின்றனர்.
இந்த ஐமுக்தீஸ்வர லிங்க வடிவத்தை வால்மீகி முனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தல வரலாறு கூறுகின்றது.
பஞ்ச பூதங்கள் ஒரு முறை சிவபெருமானை நேரில் சென்று தரிசிப்ப தற்காக சென்றனர். அப் பொழுது அங்கு காவல் காத்து வரும் நந்தி தேவரிடம் முறையாக அனுமதி பெறாமல் உள்ளே சென்றனர்.
சிவபெருமான் நித்திரை கலைந்து கண்திறக்கும்போது அந்த உக்கிரத்தை பஞ்சபூதங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இறைவன் – “பஞ்சபூதங்களே தாங்கள் தவறு செய்து விட்டீர்கள். நந்திதேவரை அலட்சியம் செய்து அவரின் அனுமதி இன்றி என்னை தரிசிக்க வந்ததே தவறு. நீங்கள் குரங்கு வடிவில் பூலோகத்தில் அலையக் கடவது” என்று சாபம் இட்டார்.
“இறைவா! நாங்கள் செய்த தவறை உணர்ந்து விட்டோம். இதற்கு விமோ சனம் தந்தால் நன்றி உடையவர்களாக இருப்போம்” என்றனர்.
“தாங்கள் சாபவிமோசனம் பெற ஆரணி நதிக்கரையில் வால்மீகி முனிவர் வடித்த சுயம்புலிங்கத்தை வணங்கி சாப விமோசனம் பெறுவீர்கள்” என்று அருளினார்.
பஞ்சபூதங்கள் இங்கு குரங்கு வடிவில் தங்கி இறைவனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தனர். லிங்கபாணத் தில் நெற்றிப்பகுதியில் ஐந்து குரங்குகள் காணப்படுகின்றன. இதை விளக்கும் விதமாக ஒரு லிங்கவடிவமும் ஆலயத்துக் குள் அம்பாள் சன்னதிக்கு அருகில் உள்ளது.
கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். ஆலயத்திற்குள் நுழைந்த தும் சுவரிலேயே சூரியன், சந்திரன், பைரவர், வீரபத்திரர் ஆகிய சிலாவடி வங்களை தரிசிக்கிறோம். இடப்பக்கம் ஆலய அலுவலகம் நவக்ரஹ சன்னதி இந்த ஆலயத்திற்கு தர்மகர்த்தாவாக அர்ச்சகர் பரம்பரையினரே இருந்து வருகின்றனர்.
பிரகார வலப்பகுதியில் பலிபீடம், மூஞ்சூறு வாகனத்துடன் கூடிய வரசித்தி வினாயகர், நாகர், உற்சவகால அலங்கார மண்டபம். கருடாழ்வாருடன் கூடிய ஸ்ரீ தேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவேங்கட சீனிவாச பெருமாள் சன்னதி ஆகிய வற்றை தரிசித்து மேற்கு திசையில் ஆரணி நதியை ஒட்டி கரையின் ஆலயத்தின் பிரதான வாயில். மூன்று நிலை ராஜகோபுரம் பல்லவராஜாக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாக கூறுகின்றனர். இதை கடந்து கொடிமரம், பலிபீடம், நந்தி தேவர் மண்டபம், கடந்து உள்ளே சென்றால் ஸ்ரீஐமுக்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீஅன்னபூர்ணாம்பாளை தரிசிக்கலாம்.
பிரகாரவலத்தில் ஸ்ரீஐயப்பன், பலிபீடம், மயில் வாகனத்துடன் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகனார், சனீஸ்வரர் சந்நிதி, சண்டிகேஸ்வரர், யாகசாலை மண்டபம், இப்படியே நீண்டு கொண்டே போகிறது.
ஸ்ரீஐமுக்தீஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் துர்கை, பிரும்மா, மஹாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி வினாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு தலவிருட்சம் வில்வமரம்.
இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்தடுத்த சன்னதிகள் இருவருக்கும் பொதுவாக மகாமண்டபம் அமைந்துள்ளது. இடப்பக்கத் தில் உற்சவ விக்ரஹங்கள் ஒரு மண்டபத்தில் உள்ளது.
ஐமுக்தீஸ்வரர் கோமுகம் நமக்கு இடப்பக்கமாக விளங்குகிறது. பஞ்சபூதங் களுக்கு விமோசனம் அருளிய இறைவன் நமக்கும், நம் குடும்பத்துக்கும் சாப விமோசனம் அருள உடன் சென்று நீங்களும் வழிபட குடும்பத்தில் சுபகாரியங்கள் வந்து குவிய ஆரம்பிக்கும். குதூகலம் பொங்கும்.