karambayamஸ்ரீ மாயமாதேவி என்னும் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில், பட்டுக் கோட்டை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் பட்டுக் கோட்டையிலிருந்து வடக்கே 8வது கிலோ மீட்டர் தொலைவில் எழில்மிகு கரம்பயம் எந்னும் அழகிய கிராமம் உள்ளது. இத்தலம் ஜீவன் முக்தி தலங்களிலே ஒன்றாகும்.

muthumariதமிழகத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக் கோயில்கள் அனைத்தும் சுமார் 500 ஆண்டுகளுக்கு உட்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் அனுமானிக் கின்றார்கள். ஆனால் இத்திருக்கோயில் மட்டும் பன்னெடுங்காலமாக ஸ்ரீ மாயமாதேவி என சிறப்பு வாய்ந்த தெய்வ பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கி வந்துள்ளது.

அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிகாபூர் 1309 டில்லியிலிருந்து புறப்பட்டான் தேவகிரி வாரங்கல் வரை படையெடுத்து வந்தான். மீண்டும் 1310ம் வருடம் டில்லி திரும்பி சென்றார். இரண்டாவது முறையாக 18-11-1310 டில்லியில் இருந்து புறப்பட்டு தேவகிரி, பண்டாரி, துவார சமுத்திரம் (கர்நாடகம்) மாபார் (தமிழகம்) வரை வந்து கொள்ளையிட்டு 18-11-1311ல் டில்லி திரும்பினான். 10-3-1311ல் தமிழகத்தில் நுழைந்தபோது நமது மாயாதேவி ஆலயத்தை தரைமட்டமாக்கினான். அன்று முதல் மாயமாதேவி மாயமாய் மறைந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவன்கள் முக்தியடைய உலக பந்தங்களி லிருந்து விடுதலை பெறவேண்டும். இது அனைவராலும் எளிதில் அடைய முடியாது ஒன்றாகும். ஸ்ரீ அம்பிகையை தரிசித்து தியானம் செய்து வருவோர்களுக்கு பூரண அருள் கிடைக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம்.

சோழ மன்னர்களின் காலத்தில் சோழ நாட்டை மண்டலங்களாகவும், வளநாடு, மாவட்டம், கோட்டம் எனப் பிரித்து நல்ல முறையில் ஆண்டு வந்தார்கள். அம்மன்னர்கள் ஆலயங்கள் பலவற்றை அமைத்தனர். சாலைகள் அமைத்து இரு மருங்கிலும் நிழல்கள் தரும் மரங்கள் பலவற்றை வளர்த்த னர். ஏரி குளங்களை அமைத்தனர். ஆறு களுக்கு கரையிட்டு பாசனத்திற்கு பயன் படுமாறு செய்து வைத்தார்கள் மன்னர்கள்.

கல்லும், கரம்பையும் காடுமாக நிறைந்த இப்பகுதி மண்ணில் மகிமை பெற்ற தல விருட்சங்களோடு ஸ்ரீ மாயமாதேவி பக்தர் களுக்கு அருள் காட்சி புரிந்து வந்தாள். நீடிய பிணியாளர்களுக்கும் நாடிய தபோனர் களுக்கும் வாடிய பயிருக்கு வானம் பொழிந்து வாட்டம் தீர்ப்பது போல ஸ்ரீ மாயமாதேவி எண்ணியதை எண்ணியபடி முடித்து இன்னல் தீர்க்கும் மகிமை நாயகியாக விளங்கி வந்தாள்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக அமைத்த இப்பகுதியில் ஸ்ரீ மாயமாதேவி மறைந்து நின்று தவம் மேற்கொள்ள எண்ணினாள் போலும்.

வடஇந்தியாவில் ஆண்டு வந்த அல்லாவு தீன் துக்ளக் என்பவன் தன்னுடைய படைத் தலைவனாகிய மாலிக்காபூரை தக்காணத்தின் மீது படையெடுக்க ஏவினான். அவனும் தக்காணத்தை வென்று தெற்கே ராமேஸ்வரம் வரையிலும் சென்றுள்ளான். அவன் படை யெடுப்பு தெற்கிலுள்ள பெருங்குடி மக்களை பெரிதும் பயமுறுத்தியது.

ஆலயங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைத்தனர். சாலைகள் அனைத்தையும் அழித்தனர். ஸ்ரீ மாயதேவியும் இருக்குமிடம் தெரியாமல் மறைத்தாள். அன்று முதல் கோவில் இருக்கு மிடம் பொது மக்களுக்கு தெரியாதிருந்தது. ஆண்டுகள் பல கழிந்தன.
வீரமாநகர் என்னும் பட்டுக்கோட்டையில் பட்டு மழவராயன்கோட்டை கட்டி ஆண்டு வந்தார். அவரது உறவினர் ஒருவர் கல்லும் கரம்பையுமாக கிடந்த இடத்தை வசப்படுத்தி கோட்டை கட்டி ஆண்டு வந்தார். அவருடைய பண்ணையில் இருந்து கரம்பை வழியாக தினமும் பாலை வேற்றூருக்கு கொண்டு செல்வது வழக்கம்.

ஒருநாள் அம்பாள் எழுந்துள்ள இடம் வந்ததும் கால் தவறி பாலைக் கொட்டி விட்டான். வருத்தத்துடன் வீடு திரும்பி விட்டான். மறுநாள் வழக்கம்போல் பால் கொண்டு வந்தான். அந்நாளும் சென்ற நாளைப்போல பாலைக்கொட்டிவிட்டான். அன்றும் வருத்தத்துடன் வீடு திரும்பி விட்டான். மூன்றாம் நாள் பால் கொண்டு வரும்போது முந்தைய நாட்களில் நடந்தது போன்றே நடந்தது. உடனே அந்த யாதவன் ஆத்திரத்தில் மண் வெட்டியைக் கொண்டு கால் இடறிய இடத்தை வெட்டினான். அவ்விடத்திலிருந்து இரத்தம் பீறிட்டு எழுந்தது. அவனது மெய்யெல்லாம் செம்முத்துக்கள் போன்று படிந்தது. வெட்டும்போது கல்லில் வெட்டுவது போன்று ஒலி கேட்டது. மீண்டும் வெட்டினான்.

உடனே செம்முத்துக்கள் போன்ற இரத்தம் அந்த யாதவன் உடம்பெல்லாம் தற்காலத்தில் மக்கள் அழைக்கும் அம்மை நோயாக மாறி விட்டது. அம்மையின் வெம்மை தாங்க முடியாது யாதவன் பெருங் குரலில் கதறினான். மக்கள் கூட்டம் பெருந்திரளாக வந்து அவனையும், அவன் வெட்டிய இடத்தையும் கண்டனர். உடனே அவ்வூர் தலைர் சில ஆட் களை கொண்டு கீழே இருந்த கல்லை தோ¢ட அது ஒரு சிலையாகக் காட்சி அளித்தது. அந்த சிலைதான் தற்சமயத்தில் கரம்பயத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன். அதற்கு சான்றாக இப்போதும் அம்பாளின் உருவச்சிலையில் யாதவனாலே வெட்டப்பட்ட தழும்புகளும், அம்பாளின் முன் கையிலும் இடது தோளிலும், மார்பிலும் காணப்படுகின்றன.

தலைவரின் கட்டளையினால் தோண்டி எடுக்கப்பட்ட அம்மன் சிலையை முழுவதும் மேலே எடுக்க முடியாமல் திகைத்ததினால், மேற்படி சிலை சுத்த சுயம்பு என தெரியப் பட்டதினால் அத்தலைவர் இதே இடத்தில் வைத்து ஒரு கொட்டகை அமைத்து அதற்குரிய சடங்குகளை செய்து யாதவனின் உடம்பெல் லாம் முத்துக்களைத் தெளித்த சிலைக்கு “முத்துமாரி” என்று பெயர் சூட்டி ஊர் மக்களையும் வணங்கும்படி செய்துவிட்டு, அந்த யாதவனை அவனது இல்லத்திற்கு அனுப்பி வைத்து விட்டு இரவு தன் வீடு சென்று உணவு அருந்திப் படுக்கைக்கு சென்றார்.

இரவு அவரது கனவில் அம்பாள் தோன்றி யாதவன் என்னிடம் அறிவற்ற தன்மையில் நடந்து கொண்ட காரணத்தால் நாம் அவனைத் திருத்துவதற்காக அவன் பேரில் முத்துக்களை வீசியுள்ளோம். ஐந்து தினங்களில் அவன் தன்னிலை அடைவான். நன்னிலை யானவுடன் அதே ஞாயிறு நமது சன்னதியில் வந்து நம்மை வணங்கிச் செல்லும்படியாகச் செய்தால் எல்லாவித நன்மைகளையும் பெற்று இம்மையிலும், மறுமையிலும் எல்லாவித யோகங்களையும் பெற்று வாழ்வான் என்று கூற கண்வழித்த தலைவர் இச்செய்தியை ஊர் மன்றத்தில் தெரிவித்து அந்த யாதவனை அம்பாள் கூறியபடி ஞாயிறு அன்று அம்பாள் சன்னதிக்கு அழைத்துச் சென்று அவனுக்கு ஏற்பட்ட சலனத்தை போக்கி அம்பாளின் விபூதி குங்கும பிரசாதத்தை வழங்கி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த நாள் பங்குனி மாதமாகும். அந்த காரணத்தினால்தான் இவ்வூர் அம்பாளுக்கு ஒவ்வொரு பங்குனித் திங்களிலும் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு பக்த கோடிகளுக்கு மகிழ்வூட்டும் வண்ணம் 12 தினங்கள் திருவுலா வந்து அருள்பாலிக்கின்றாள்.

திருமுருகாற்றுப்படையில் சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் வேல்வாங்கி திருவாரூர் அருள்மிகு. வன்மீகநாதர் சுவாமி ஆலயத்தில் பிரார்த்தனை செய்து பின்னர் கரம்பயம் அருள்மிகு. முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்கி பிரார்த்தனை செய்து திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு சென்றதாக ஐதீகம். இந்த திருக்கோயிலின் உற்சவ அம்மனின் வலது புறம் வேலும், இடது புறம் பழநி ஆண்டவரும் வீற்றிருப்பது இதற்குச் சான்றாகும்.

இந்த அமைப்பு தமிழ்நாட்டில் எந்த அம்மன் திருக்கோயிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாள் தன் மாய சக்தியால் இன்றும் நினைத்தவருக்கு நினைத்தப்படி வாரி வழங்கும் உலக நாயகியாக அருளாட்சி புரிந்து வருகிறாள். அம்மை நோயால் அவதிப்படு பவர்கள் இக்கோயிலில் அம்பிகையை பிரார்த்தனை செய்து விபூதி, வேப்பிலையும், மஞ்சளும் பூசிட அம்மை நோய் தீர்த்துவிடும்.

தீராத வியாதியாளர்கள், மாறாத வறுமை யுள்ளவர்கள் இத்திருக்கோயிலில் வந்து பிரார்த்தனை செய்து விமோசனம் பெற்றுள்ளனர்.

நாம் எந்த காரியத்தை தொடங்கும் முன்னும் அம்பிகையை நினைத்து மனங்கசிந்து பிரார்த்தனை செய்தால் வேண்டியதை வேண்டியாங்கு பெறுவது திண்ணம்.

இத்திருக்கோயிலின் அம்மன் சுயம்புவாக பூமியிலிருந்து வெளிப்பட்டிருப்பதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருக்கோயிலின் திருக்குளத்தில் நீராடி இத்திருக்கோயிலில் தங்கி அம்மனை பிரார்த்தனை செய்தால் அனைத்து நோய்களுக்கும் (குறிப்பாக அம்மை நோய் கண்டவர்கள்) குணமாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் குழந்தை இல்லாதவர்களும், திருமணம் ஆகாதவர்களும் அம்மனை வேண்டி தீபம் போட்டு அர்ச்சனை செய்து வந்தால், கூடிய விரைவில் குழந்தை பாக்கியமும், திருமண பாக்கியமும் கைகூடும். கணவனுக்கு தீராத நோய்கள் இருந்தால் அம்பாளுக்கு மாங்கல்யம் போடுகிறேன் என்று வேண்டிக்கொண்டால் சகலவிதமான நோய் குணமடைந்து வருகிறது.
அது அம்பாளின் அருளால் நடைபெற்று வருவதால் இப்பகுதி வாழ் புண்ணியரசு நாட்டைச் சேர்ந்தவர்கள். முசுகுந்த நாட்டைச் சார்ந்தவர்கள், பாப்பாநாடு பதினெட்டரசு நாட்டைச் சார்ந்தவர்களும் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவது சிறப்பு அம்சமாகும். இம்மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பல வெளி மாவட்டங்களிலிருந்தும் பல சாதி மதம் பாராமல், அனைத்து மதத்தினரும், பால் காவடி, அர்ச்சனை, அபிஷேகம், முடி காணிக்கை எடுப்பது மிகவும் சிறப்பாக நடைபெற்று வரு கிறது. இதை பார்த்து ரசிக்கவே ஒரு கூட்டம் திருவிழா காலங்களில் சிறப்பித்து காட்டுவார்கள்.

பல ஆண்டுகளாக குழந்தை செல்வம் இல்லாத கானாடு காத்தான் இராமசாமி செட்டியார் ஸ்ரீ முத்து மாரியம்மன் வேண்டு தல் புரிந்ததால் குழந்தை பிறந்தது. அதன் காரணமாக இத்திருக்கோயிலுக்கு 1910ஆம் ஆண்டு அழகிய சித்திர வேலைப்பாடு பொருந்திய அச்சுத்தேர் ஒன்றை செய்து காணிக்கையாக்கினார்.

இத்திருக்கோயில் பங்குனி சித்திரை திருவிழா சிறப்பாக நடந்தேறி வருகிறது. அப்போது தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடந்து, மறுநாள் தீர்த்தாடனம் செய்து, அன்று ª£ருநாள் இரவு கரம்பயம் அருள்மிகு கைலாச நாதர் ஆலயத்தில் தங்கி விடியற்காலம் முத்துப்பல்லக்கில் வீதிவலம் திருக்கோயிலில் வந்து ஸ்ரீ அம்பாள் சேரும்.
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக் கோயிலின் உப ஆலயமான கரம்பயம் அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தில் 1958ஆம் ஆண்டு இராமேஸ்வரம் பாத யாத்திரை செய்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கரச் சாரியார் அவர்கள் 1 நாள் தங்கி பிரார்த்தனை செய்துள்ளார்கள். அப்பொழுது வேத விற்பன் னர்கள் பலரும் பிரார்த்தனையில் கலந்து கொண்டுள்ளார்கள். இத்தலம் வேத காலத்திற்கு முற்பட்டது என்பதை ஸ்வாமிகள் உணர்ந்தே இங்கு தங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருக்கோயிலுக்கு அர்ச்சகரால் காமிய ஆகமபடி இரண்டு காலம் பூஜை நடைபெற்று வருகிறது. ஆண்டு பெருந்திருவிழா பங்குனி சித்திரை மாதத்திலும், ஆவணி கடைசி ஞாயிறும் வருடத்திற்கு இரண்டு முறை மிக சிறப்புடன் நடந்து வருகிறது. இத்திருவிழாவில் பல வண்ண காவடிகள், தேர் திருவிழா, முத்துப்பல்லக்கு மிக மிக சிறப்பாக நடை பெறும். மேற்படி திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் அம்பாள் தரிசனம் செய்து பல பூரண புண்ணியம் பெற்று பலன் பெற்று வருகிறார்கள்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
98417 89483