கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் வழியில் கூந்தலூருக்கு இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேதியூர். தற்போது “எரவாஞ்சேரி” என்று உள்ளது.
Category Archives: Temples
பிராணநாதேஸ்வரர்கோவில், பஞ்ச மங்கள ஷேத்திரம் – திருமங்கலக்குடி

கும்பகோணம் – மயிலாடுதுறைசாலைவழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும்சாலையில் சுமார் 2 கி.மி. தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது.
ஓதவனேஸ்வரர்கோவில், திருசோற்றுத்துறை

இறைவன் பெயர் (சுவாமி) : ஓதவனேஸ்வரர், சோற்றுத்துறைநாதர், தொலையாச்செல்வர்.
இறைவிபெயர் (அம்பாள்): அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சயபாத்திரம் கொடுத்த தலமாகும். பதிகம் திருநாவுக்கரசர் – 4 திருஞானசம்பந்தர் – 1 சுந்தரர் – 1
கருணை உள்ளம் மிக்க பஞ்சவர்ணேஸ்வரர் சமேத காந்திமதி அம்மை திருகோவில்

திருச்சிராப்பள்ளிநகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் ஒரு மிகப்பழமையான 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்

திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர்.
திருவதிகை வீரட்டேஸ்வரர்- பெரியநாயகி, திரிபுரசுந்தரி

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.
அருள்மிகு சர்ப்பபுரீசுவரர், நாகநாதசுவாமிகோவில்

சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வந்தார். ஒருசமயம் அவர் வளர்த்த காமதேனு பால்சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்கு பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார்.
அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,சீர்காழி

இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம் நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மதில்களோடு விளங்குகின்றது.
கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி

அதிசயத்தின் அடிப்படையில் பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.
மௌனகுரு கண்ணப்ப ஸ்வாமிகள், காவாங்கரை

கண்ணப்ப ஸ்வாமிகள் கேரள பூமி, கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இவருடைய தாய் எரமத்து என்னும் கிராமத்தையும் தந்தை செனியஞ்சால் என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.