Welcome to SWAYAMVARALAYA. FREE...FREE...FREE ASTROLOGICAL PREDICTION.. FEEL FREE TO ASK ANY QUESTION

Category Archives: Articles

பிராணநாதேஸ்வரர்கோவில், பஞ்ச மங்கள ஷேத்திரம் – திருமங்கலக்குடி

tmk2

பிராணநாதேஸ்வரர்கோவில், பஞ்ச மங்கள ஷேத்திரம் – திருமங்கலக்குடி பூர்வஜன்மதோஷம், பித்ருக்கள்சாபம் நிவர்த்தியாகும் திருக்கோவில் இறைவன்பெயர் பிராணநாதேஸ்வரர் இறைவிபெயர் மங்களநாயகி, மங்களாம்பிகை பதிகம் திருநாவுக்கரசர் – 1 திருஞானசம்பந்தர் – 1 தல விருட்சம்: கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) தீர்த்தம்: மங்களதீர்த்தம் (காவிரி) பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் எப்படிப்போவது: கும்பகோணம் – மயிலாடுதுறைசாலைவழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும்சாலையில் சுமார் 2 கி.மி. தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. ஆலயமுகவரி: அருள்மிகுபிராணவரதேஸ்வரர் திருக்கோவில்,திருமங்கலக்குடி, திருமங்கலக்குடிஅஞ்சல், திருவிடைமருதூர்வட்டம், தஞ்சாவூர்மாவட்டம் – PIN

ஓதவனேஸ்வரர்கோவில், திருசோற்றுத்துறை

ஓதவனேஸ்வரர்கோவில், திருசோற்றுத்துறை இது காசிக்கு அடுத்தபடியாக அட்சயபாத்திரம் கொடுத்த தலமாகும். இறைவன் பெயர் (சுவாமி)  : ஓதவனேஸ்வரர், சோற்றுத்துறைநாதர், தொலையாச்செல்வர் இறைவிபெயர் (அம்பாள்): அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை இது காசிக்கு அடுத்தபடியாக அட்சயபாத்திரம் கொடுத்த தலமாகும். பதிகம் திருநாவுக்கரசர் – 4 திருஞானசம்பந்தர் – 1  சுந்தரர் – 1 கோவில்அமைப்பு: கிழக்குநோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும்,பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்புவாயிலைக்கடந்து

கருணை உள்ளம் மிக்க பஞ்சவர்ணேஸ்வரர் சமேத காந்திமதி அம்மை திருகோவில்

கருணை உள்ளம் மிக்க பஞ்சவர்ணேஸ்வரர் சமேத காந்திமதி அம்மை திருகோவில் – திருமூக்கிச்சரம் (உறையூர்)  இறைவன்பெயர்: பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர் இறைவிபெயர்: காந்திமதிஅம்மை, குங்குமவல்லி பதிகம்: திருஞானசம்பந்தர் – 1 தலச்சிறப்பு:  திருச்சிராப்பள்ளிநகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் ஒரு மிகப்பழமையான 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணபாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கி.பி. 885 ம் ஆண்டு கல்வெட்டிலிருந்து இக்கோவிலில் பூஜைகள் சிறப்பாக நடைபெற தங்கநாணயங்கள் தானமாக உறையூர் கிராம சபைக்கு கொடுக்கபட்டதை அறிய முடிகிறது.

வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்

srivanjiyam

திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர்.

திருவதிகை வீரட்டேஸ்வரர்- பெரியநாயகி, திரிபுரசுந்தரி

Veerattaneswarar-Temple

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.

அருள்மிகு சர்ப்பபுரீசுவரர், நாகநாதசுவாமிகோவில்

Naganathaswamy5

சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வந்தார். ஒருசமயம் அவர் வளர்த்த காமதேனு பால்சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்கு பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார்.

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,சீர்காழி

sattanada-5

இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம் நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மதில்களோடு விளங்குகின்றது.

கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி

kathiramangalam

அதிசயத்தின் அடிப்படையில் பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள வனதுர்க்கை கிழக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.

மௌனகுரு கண்ணப்ப ஸ்வாமிகள், காவாங்கரை

kvkarai

ஒரு சத்திய புருஷனின் சான்னித்யம் கண்ணப்ப ஸ்வாமிகள் கேரள பூமி, கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது.  இவருடைய தாய் எரமத்து என்னும் கிராமத்தையும் தந்தை செனியஞ்சால் என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.  இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது மாதிரி பின்னாளில் காவாங்கரையில் தான் தங்கி இருந்த குடிசையின் முகப்பில், எரமத்த செனியஞ்சாலு பிறந்தது மௌனகுரு கண்ணப்ப ஸ்வாமிகள் என்று எழுதி வைத்திருந்தாரம். ஷீர்டி பாபாவுக்கும் கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.  இருவருமே எப்போது பிறந்தார்கள்

சித்தநாதேஸ்வரர்கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்)

tn5a

மேதாவிமகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கிவந்தார். மஹா விஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப்பிறக்க அருள் செய்யவேண்டும் என்று சிவபெருமானை வேண்டிதவம் இருந்தார்.