– வனஜா மஹாதேவன்

பொன்னேரி ரயில் நிலையத்தில் எங்களை அன்புடன் 70 வயது மதிக்கதக்க ஒருவர் வர வேற்று, “என்ன மேடம், ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து, எப்படி இருக்கீங்க? எங்கே இவ்வளவு தூரம்?” என்று விசாரித்தார். நானும் புன்முறுவலுடன, “இங்கு அரசூர் கிராமம் எங்கு இருக்கிறது?” என்று கேட்டோம். அவர் உடனே, “சௌந்தரவல்லியை தரிசிக்க வந்தீர்களா?” என்று கேட்ட வுடன் அவர் முகபாவனை மாறுபட்டதை உணர்ந்தேன்.
“என்ன ஆச்சு?” என்ற வுடன், “வாருங்கள் பேசிக் கொண்டே சொல்கிறேன்” என்ற அவர, “நீங்கள் சொன்ன கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை நீங்களே பாருங்கள்” என்றார். பின்னர் அந்த கோயிலின் வரலாற்றை கூற ஆரம்பித்தார். புராண வர லாற்றுப்படி வானரப்படை தலைவன் ‘வாலீ’ சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்த காலத் தில் தனது கைகளால் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்ற ஆர்வத்தில் பல இடங்களை சுற்றிவந்து பேரழிவு காலத்தில்கூட எந்த சலனமும் இன்றி விளங்கிய “அசலனபுரம்” என்ற பகுதிக்கு வருகை புரிந்தார். தற்போது “அரசூர்” என்று அழைக்கப்படும் இவ்வூருக்கு வந்து, மனது மிகவும் அமைதி ஏற்பட்ட வுடன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வானரப் படைகளின் உதவியுடன் “வாலீ தீர்த்தம்”¢ என்ற புண்ணிய தீர்த்ததையும் ஏற்படுத்தி வழிபாடு செய்து வந்தான்.

அரசூர் திருத்தலத்தில் அமைந்துள்ள திருவாலீஸ் வரர் திருக்கோயில் பல யுகங்களை கடந்து தமிழ கத்தை ஆண்ட பல வேறு மன்னர்கள் இத்திருத் தலத்திற்கு வந்து தரிசித்து, பல அற்புத அனுபவங் களை பெற்று பெரும் பேறு பெற்றுள்ளனர்.

புராண வரலாற்றின் படி முதலாம் நரசிம்ம வர்மன் (630-668) ஆட்சிக்கு பின்வந்த இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன் (700-728) காலத்தில் இந்த கோயில் அதிஷ்டானம், முதல் விமானம் வரை முழுவதும் கல்லினால் கட்டப் பட்டதாக தெரிகிறது. இவரது காலத்தில்தான் விமானம், அகமண்ட பம், முகமண்டபம், “ஸ்ரீ சௌந்தரவல்லி” அம்மன் சந்நதி, திருச்சுற்று, மதில், கோபுர வாசல் எல்லாம் கட்டப்பட்டது.

போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் மிகப்பெரிய கருங்கற்களைக் கொண்டு சிற்பிகளும் அரசர்களும் அரும்பாடுபட்டு கல்லை கலைவண்ணமாக்கி திருப்பணிகளை செய்து இதுபோன்ற மிகப்பெரிய பல திருக்கோயில்களை நமது வழிபாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார்கள். ஆனால், இங்கு இதுநாள் வரை நவக்கிரஹங்களுக்கான சில வழிபாடு இல்லை. காலப்போக்கில் ஜமீன் பரம்பரையில் வந்த ஸ்ரீ பாப்பிராஜ் முதலி யார் அவர்களால் ஈசான்ய மூலையில் “ஸ்ரீ சனீஸ்வரர்”க்கு மண்டபம் அமைத்து வழி பட்டதாக தெரியவருகிறது.
இங்கு பஞ்சலிங்க மூர்த்திகள் தேவிய ருடன் அருள்பாலிப்பது மிகவும் விசேஷ மாகும்.

ஸ்ரீ ஞான பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் (ஐந்து தலைநாகத்துடன் அமைந்துள்ளது)
ஸ்ரீ ஏலவார் குழலி அம்பிகை சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர்
ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமநாதேஸ்வரர்
பஞ்சலிங்கத்தை ஒரே இடத்தில் தரிசிக்கும் பேறு நமக்கு கிடைக்கிறது.
இங்கு சிவலிங்க பாணத்தில் 16 பட்டைகள் கொண்ட சக்தி வாய்ந்த “சோடசலிங்கமாக” காட்சி அளிக்கிறது. அபிஷேகம் செய்யப்படும் போது 16 பட்டைகளிலும் சீராக அபிஷேக ஜலம், பால் வழிந்தோடும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் என்கிறார்கள்.

கோயிலின் வெளிச்சுற்றில் ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மஹா விஷ்ணு என காணமுடிகிறது. ஸ்ரீ பைரவமூர்த்தி தற்சமயம் கோயிலின் உள்ளே இடம் பெற்றுள்ளது.
கோயிலின் உள்ளே உள்ள பஞ்சலிங்கங் களை எப்பொழுதும் பார்த்த வண்ணமாக ஸ்ரீ பஞ்சலிங்க கணபதி வடதிசை பார்த்து அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பாகும். அம்பிகை ஸ்ரீ சௌந்தரவல்லி மற்றும் அழகுடை நாயகி என்னும் பெயர்களில் வழங்கப்படுகின்றாள். பெயருக்கு ஏற்ற சௌந்தர்யத்துடன் அன்னையின் அழகில் தன